உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் 19

தாம் செல்லும் இடங்களில் எதிர்ப்பட்டார்க்குள்ள துன்பங் களை நீக்கி அவர்க்குப் பேரன்பாற் பேருதவிகள் செய் தமையும் நினைவிற் பதிக்கற்பாற்று.

சிவ

என்றித் துணையுங் கூறியவாற்றாற், சைவசமயம் என்பது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய பிரானிடத்து மெய்யன்பு பூண்டு ஒழுகி, அம் முகத்தால் எல்லார்க்கும் எல்லா உயிர்கட்கும் அன்பராய் ஒழுகும் மெய்ந்நெறியினை வலியுறுத்துவதா மென்பதும்; இஃதுண ராது சாதி யிறுமாப்புத் தலைக்கேறிய போலிச்சைவர்களால் மக்கள்பால் வைக்கும் அன்புக்கு முழுமாறான முறையில் அஃது ஒருபுறம் நெருக்குண்ண, மற்றொரு புறம் போலிச் சீர்திருத்தக்காரராற் கடவுள்பால் வைக்கும் அன்புக்கு முற்றும் நெருக்கப்படுகின்றதென்பதும், இவ்விரண்டினிடையிலும் அஃது அகப்படாது நிற்றலை விரும்பித் தம்மையுந் தம்மோடொத்த உயிர்களையும் புனிதப் படுத்துதற்கண் முனைந்து நிற்கும் மெய்யன்பர்கள் சிவ பிரானிடத்தும் ஏனை யெல்லா உயிர்களிடத்தும் மெய்யன்பு பூண்டொழுகற்பால ரென்பதும் விளக்கப்பட்டன என்க.

முரணான

முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/281&oldid=1585893" இலிருந்து மீள்விக்கப்பட்டது