உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

247

அருள்செய்யும் பேராற்றலுடைய னென்பதும் இதுகாறும் விளக்கிய வாற்றால் நன்கு துணியப்படுமென்க.

அற்றேல், இறைவன்பால் அன்புபூண் டொழுகுதல் ஒன்றே போதுமோ, நம்மோடொத்த மக்கள்பால் அன்பு பூண் டொழுகுதல் வேண்டாமோ வெனில், இறைவன்பால் மெய்யன்பு நிகழப் பெற்றார்க்கு, அவ் அன்புக்கு மாறான வன்னெஞ்சஞ் சிறிதும் உண்டாகாமையின், அத் தன்மை யினாரே எல்லார் மாட்டும் எல்லா உயிர்கள் மாட்டும் அன்பு பூண்டு ஒழுக வல்லாரென்று தெளிக. தீய வொழுக்கங்கள் உடையாரிடத்தும், மாறுபட்ட கொள்கைகள் உடையா ரிடத்தும், நோய் வறுமை கொண்டாரிடத்தும் ஒருவர் அன்பு பூண்டொழுகுதல் இயலாதென்று முன்னரே காட்டப் பட்டமையின், இறைவன்பால் அன்பு கொண்டார் மட்டும் எல்லாரிடத்தும் அன்பு வைத்து ஒழுகமாட்டுவா ரென்று கூறிய தென்னையெனின்; உலகத்தின்கண் உள்ள எல்லா மக்களையும் எல்லா உயிர்களையும் அறியாமை யிருளி னின்றும் அடுத்து அறிவொளியில் துலங்கச்

சய்ய

டை

வல்லதும், அவ்வாறு துலங்கச் செய்யும் முயற்சியை உடை யறாது செய்வதும் ஆகிய அளவிலாற்றலும் அளவிலறிவும் உடைய கடவுள் ஒன்றே யன்றி ஏனையோர் அல்லர் என்பதை இறைவன்பால் மெய்யன்பு பூண்ட உண்மையடியார் நன் குணர்வர். ஆகவே, அவர் தனித்தனியே சென்று ஒவ் வாருவர்க்கும் அன்பாவன செய்து ஒழுகுவார் அல்லர்; எல்லார்க்கும் நன்மை செய்வானான றைவனையே

வேண்டி அவர் அம் முகத்தால் எல்லார்க்கும் அன்பு செய்வர்; இது திருஞானசம்பந்தப் பெருமான்,

66

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமுந் துயர் தீர்கவே”

என எல்லார்க்கும் எல்லா உயிர்க்கும் நன்மையை வேண்டி வாழ்த்தின பேரன்புரையால் நன்கு விளங்கா நிற்கும். வ்வளவில் அமையாது, சிவபிரான்றன் மெய்யடியார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/280&oldid=1585892" இலிருந்து மீள்விக்கப்பட்டது