உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் 19

உடம்பின் உள் உள்ள கருவிகளைத் தெரிந்து இயக்கும் அறிவாற்றல் சிறிதுமில்லாத எமக்கு உற்ற துணையாய் எமதுயிரிலும் உடம்பிலும் பிரிவின்றி நின்று, அவைதம்மை ஓவாது இயக்கிப் பயன்படுத்தும் ஒப்பற்ற நண்பனாகவும் உடனிருந்து, அவ்வளவி லமையாது நல்லது தீயது பகுத்தறிய மாட்டாது யாம் மயங்கி நிற்குங்காலெல்லாம் எமது நெஞ்சத்தின் கண் நின்று அவற்றைப் பகுத்து அறிவிக்குங் குருவுமாய்த் திகழா நின்ற முதல்வனுக்கு ஏழையேம் எங்ஙனம் நன்றி செலுத்துவேம்! அவன்றன் ன் அருட்

பெருமையை எங்ஙனம் பாடுவேம்! எங்ஙனம் பரவுவேம்! என்று ஆற்றாது உருக உருக, அவன்மாட்டு எமக்கு மெய்யன்பு நிகழ்தல் திண்ணமன்றோ?

இங்ஙனம் அன்பு நிகழப் பெற்றார்க்கு, இதுகாறும் உலகுயிர்களில் அருவாய் நின்ற ஆண்டவன் உருவாகி அவர் கண்ணெதிரேயும் புலப்பட்டுத் தோன்றி அருள் செய்வன். இவ்வாறு ஆண்டவன் தன் அருளொளி வடிவிற் கட்புலனாய்த் தோன்றி அருள் வழங்கும் உண்மை, மாணிக்கவாசகர் முதலான ஆசிரியர் தம் மெய் வரலாறுகளால் தெற்றென விளங்கா நிற்கின்றது. எனவே, மக்கள் மட்டுமே காணப் படுபொருள், கடவுளோ காணப்படாத பொருள். காணப் படும் மக்களிடத்தே அன்பு பாராட்டுத லொழிந்து, காணப்பாடாத கடவுளிடத்தே அன்பு பாராட்டுதல் வீண் என்பாருரை ஞாயிறில்லை யென்னும் பிறவிக்குருடருரையே யாதல் காண்க. உடம்பில் நிற்கும் மக்களுயிருங் காணப் படாதது, உடம்பு உயிர் உலகுகளில் நிறைந்து நிற்குங் கடவுளுங் காணப்படாதது. உடம்பில் நிற்கும் உயிரை அவ் வுடம்பின்கண் அது தோற்றுவிக்கும் அறிவு நிகழ்ச்சிகளால் நன்குணர்ந்து நாம் அதன்கண் அன்பு வைத்தல் போல, உடம்பு உயிர் உலகுகளில் நிற்குங் கடவுளையும் அவற்றின்

கண்

அது தோற்றுவிக்கும் அறிவு நிகழ்ச்சிகளால் நன்குணர்ந்து அதன்பாற் பேரன்பு பூண்டு ஒழுகக்கட மென்பதும்; அவ்வாறு அன்பினால் அகங்கரைந்து உருக உருகக், கட்புலனாய்த் தோன்ற மாட்டாத உயிர்போலன்றி இறைவன் தன் அருள்ஒளி வடிவிற் கட்புலனாகவுந் தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/279&oldid=1585891" இலிருந்து மீள்விக்கப்பட்டது