உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

245

எளியதோர் இல்லம் அமைப்பதற்கே இத்தனை அறிவும் இத்தனை அறிவு முயற்சியும் இன்றியமையாதனவாய் வேண்டப்படுமாயின், மக்களுள் எத்தனை அறிவுமிக்கா ராலும் ஆக்க முடியாத நம் உடம்புகளையும், நம்மினுந் தாழ்ந்த ஏனைச்சிற்றுயிர்களின் உடம்புகளையும் அமைத்து அவை உயிர்களின் அறிவு விளக்கத்திற்குப் பயன்படுமாறு அவற்றினுள்ளிருந்து அவற்றை ஓவாது இயக்கிக்கொண் டிருக்கும் ஆற்றல் எவ்வளவு பேரறிவும் பேராற்றலும் ஓருயிரைப்பற்றி யன்றித் தனித்து நிற்பன அல்லவாகையால், அவ் வியத்தகு குணங்களையுடைய உயிர் முதலே எல்லாம் வல்ல இறைவன் ஆம் என்பது சிறிது உணர்ந்து பார்ப்ப வர்க்கும் நன்கு விளங்கு மன்றோ? இவ்வாறு இயற்கை யமைப்பிலும், உயிருள்ள உட டம்புகளினமைப்பிலும் றைவன்றன் அறிவாற்றல் நன்கு விளங்கித் தோன்றலால், அவ் வமைப்புகளெல்லாம் அறிவில்லாமலே நடக்கின்றன என்று உரைப்பாரிலும், அறிவிலார் வேறில்லை யென்பதே தேற்றமாம் என்க.

இனிக் கடவுளின் அருட்டொழில் நிகழ்ச்சிகள், உயிரில்லாத இயற்கைப் பொருள்களின் அமைப்பிலும், உயிருள்ள உடம்புகளின் அமைப்பிலும் நன்கு விளங்கித் த் தோன்றலால், அவ்வருள் நிகழ்ச்சிகளை ஒ வ் வாரு பொருளிலும் ஒவ்வொருடம்பிலும் உற்று நோக்கி யுணர உணர, அங்ஙனம் உணர்வார்க்கு அப்பொருள்களிலெல் லாம் நிறைந்து நிற்கும் இறைவன்றன் அருள்நிலை செவ்வனே புலனாம். அது புலனாகப் புலனாக, நாம் எத்தனை முறை வேண்டிக் கேட்டாலும் நமக்கு வேண்டுஞ் சிறிய உதவிகள் தாமுஞ் செய்தற்கு நெஞ்சம் இரங்காத மக்களைப்போல் அல்லாமல், வேண்டிக் கேட்கத் தெரியாத அறியாமையிற் கண் பூவாக் குழவியைப்போல் நாம் இருந்த காலத்துந், தாயினுஞ்சாலப் பரிந்து நமக்கு வேண்டுவன வெல்லாம் முன்னரே யமைத்து வைத்து, அங்ஙனம் அமைத்து வைத்தவைகளை யாம் அறிவு தெரிந்து நுகர்தற்கு உதவியாக வேறெவரானும் ஆக்கமுடியாத இவ்வுடம்பையும் அமைத்துக் கொடுத்து, அங்ஙனங்கொடுத்த பின்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/278&oldid=1585890" இலிருந்து மீள்விக்கப்பட்டது