உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் 19

அஃது யாங்ஙனம்? உடம்புகடோறும் உள் நிகழும் நிகழ்ச்சிகள் உயிரோடு கூடிய உடம்பினியற்கையாய் நடை பறுவனவேயல்லாமல், அவை இறைவன்றன் அருள் நிகழ்ச்சிகளேயாம் என்றல் பொருத்தமின்றாம் பிறவெனின்; நன்று சொன்னாய்; உணவுப் பண்டங்களை வித்தி விளைத் தற்கும், அங்ஙனம் விளைத்த விளைவுகளைப்பதப்படுத்திப் பல்வேறு சுவைப்படச் சமைத்தற்கும், சமைத்த அடிசிலுங் கறியும் உண்டற்கும் எல்லாம் அறிவோடு கூடிய முயற்சிகள் வேண்டும்; ஆனால் உண்ட உணவை எவராலும் செய்ய முடியாத வகையிற் பல்வேறு சாறுகளாகப் பிரிவு செய்து, அச் சாறுகளைஉடம்பெங்குஞ் செலுத்தி, அதனை வளர்த்து நிலைபெறச் செய்யும் அரும் பெருந் தொழிலுக்கு மட்டும் அறிவு வேண்டாம் என்பாரின் அறியாமையினும் மிக்க தொன்றுண்டோ சொன்மின்கள்! அறிவற்ற மாயையின் அணுக்களைப் பலவேறு வியத்தகு முறைகளில் ஒட்டி ழுங்குபடுத்தி, அவற்றைப் பயன்படச் செய்தற்கு அறிவு முயற்சி இன்றியமையாததா யிருத்தலை எங்குங் காண் கின்றோம்.

ஓர் அழகிய இல்லம் அமைப்பதற்கு எவ்வளவு அறிவு முயற்சி வேண்டியிருக்கிறது! இயற்கையிற் காணப் படுந் தேக்குமரந் தானாகவே வாயிற்கால் சாளரக்கால் களாகவும் உத்திரம் கைத்துண்டுகளாகவும் மாறிவிடுமோ? நிலத்தின்கண்ணுள்ள களிமண் தானாகவே இடம் விட்டுப் பெயர்ந்து செங்கற்களாக வடிவு திரிந்து விடுமோ? கட மோ? கடலின் அடிப்படையிற் கிடக்குங் கிளிஞ்சில்கள் தாமாகவே நிலத்தின்மேல் வந்து சுண்ணாம்பாகிச் செங்கற்களொடு சேர்ந்து, சுவர்களை எழும்பி விடுமோ? சிறிதும் ஆகவே. தச்சருங்கொற்றருங் கூலியாட்களுமெல்லாம் ஒருங்கு சேர்ந்து, அவ்வில்லம் அமைப்பதற்கு வேண்டு மளவும் வகையுமெல்லாஞ் செவ்வனே அறிவினார் ஆராய்ந்து பார்த்து, மேற்சொன்ன தட்டுமுட்டுகளை யெல்லாம் ஒருவழித்தொகுத்து, அவ்வவை தம்மை அமைக்க வேண்டும் இட ங்களில் அமைத்து எவ்வளவு கருத்தோடு, எவ்வளவு அறிவு முயற்சியோடு அதனை அமைத்து முடிக்கின்றார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/277&oldid=1585889" இலிருந்து மீள்விக்கப்பட்டது