உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

257

களமாகாத முயலின்கண் இருப்புப்பெறுதலாகாமையின் ஆண்டும் அதனை எதிர்மறுக்கும் பொருட்டாகவே அச் சால்லாட்சி எழுந்ததென்று உணர்க.

ஆகலின், அச்சொல்லாட்சிகள் முக்காலத்துமில்லாத வெறும் பொருளைக் குறிப்பன என்பது அடாது; மற்று அவை பொருள்கள் இணங்குதற்கு ணங்குதற்கு உரிய நேர்ச்சியில்லாமை மாத்திரையே விளக்குவனவாம் என்றொழிக. இந்த நூலாடை யை நீரால்நனை என்பதேயன்றி அதனை நெருப்பால் நனை' என்றல் ஏலாமையான், பொருள்கள் தம்முட் பொருந்துதந்குரிய குணநெறி கடைப்பிடியாது, அச் சொல்லாட்சிகள் வெறும் பொருள் குறித்து வந்தனவா மென்பாருரை மென்று ஒழிக. இதுபற்றியே சேனாவரையாரும் பொய்ப்பொருள் குறிப்பனவும் பொருளுணர்த்துவனவே யாம்” என்று உரை கூறினார். எனவே, வெறுமையாக நிற்பதொரு பொருளு ளு மின்றாம்; அதனை குறிக்குஞ் சொல்லுமின்றாம். அற்றேல், வெறுமை என்பது தான் என்னையெனின், உள்பொருளின் எதிர்மறையே அவ்வாறு சொல்லப்படுதலல்லது வெறும் பொருளெனப் பிறிது ஒன்று இல்லை யென்க. இங்கே

குழறுபாட்டுரையா

குடமில்லை படமில்லை' என்ற வழிக்குடம் படம் முதலிய வற்றின் இருப்பை ஆண்டு மறுத்தவாறன்றி வேறில்லை யென்பதூஉம் உலக வழக்கிற் கண்டு கொள்க. யாங் கூறியதே தருக்க நுாலார்க்கும் உடன்பாடாதல் *"பிரதியோகி யுணர்ச்சியின்றி அபாவவுணர்ச்சி பெறப்படாது

என்று

அவர் கூறுமாற்றாற் காண்க. இதனால் தம்முள் நேர்ச்சி யில்லாத பொருள்கள் ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டுத் தோன்றுதல் இல்லையாமென்பதூஉம், இதற்கு முயலின் கண் நேர்ச்சியில்லாத கொம்பு அதன் தலையில் யாண்டுங் காணப்படாது ஒழிதலே ஏதுவாய் நிலைபெறுமென்பது உம் நன்று விளங்கும். இது கிடக்க.

இனி ஒருசாரார் பருப்பொருளாகக் காணப்படும் இந்த னி உலகங்களையும், இவற்றின்கண் அறிவுடையராய் இயங்கும் உயிர்களையும் இறைவன் ஒன்றுமில்லாதவெறும் பாழி னின்றும் படைத்திட்டான் என்பவாகலின் இல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/290&oldid=1585902" இலிருந்து மீள்விக்கப்பட்டது