உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

  • உரைமணிக்கோவை :

259

பெரிதென்றும் எல்லாரும் முணர்ந்து கொள்வர். இங்ஙனம் பொருள்களின் நிலையை வேறுபடுத்தி அவற்றைத் தொழிற்கண் உய்ப்பதாகிய முயற்சியே ஆற்றல் அல்லது சக்தி என்பதன்றி உள்ெ உள்பொருளை ள இல்பொருளாகவும் ல் பொருளை உள்பொருளாகவும் செய்வதே ஆற்றலென யாண்டும் பெறப்படுமாறில்லை. யாங் கூறியதே சிறந்த பௌதிக அறிஞர்களாகிய *பால்வர் ஸ்டூவர்ட், ஜோன்ஸ், பெஸன்டன்,+ கூக் முதலானவர்களுக்கும் உடன்பாடாதல் அவ்வவர் நூல்களிற் கண்டுகொள்க.

இனி, அவ்வவர் ஆற்றன்மிகுதி அவர் உய்க்கும் பொருட் பரிமாணம் பற்றியே அளந்தறியப்படக்காண்டலால், நாம் வாழ்கின்ற இந்த நிலவுலக வட்டத்தையும் இதனினும் எத்தனையோ மடங்கு கு பெரிதாகிய ஞாயிறுமண்டல முதலான பல அண்டப்பகுதிகளையும் மிகு புதுமையாக உண்ட ாக்கி, அவை ஒன்றை ஒன்று இழுக்கும் இழுப் பாற்றலால் விண்ணில்நெறி பிறழாது இயங்கும்படி செய்வித்து அவ்வண்டங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வவற்றின் தட்பவெப்ப இயல்புக்கேற்ற எண்ணிறந்த உயிர்களை எண்ணிறந்த உடல்களில் அமைத்து அறிவூட்டியும், அவ்வுயிர்கள் செய்யும் வணக்க வழிபாடுகளாகிய நற்கருமங் களையும் அவற்றின் வழுவி அவர் செய்யுந் தீக்கருமங்களையும் அறிந்து அவ்வவர்க்கு ஏற்ற கதி வழங்கியும் பேராற்றல் செய்கின்றவனாகிய இறைவன் அவ்வாறு அளவிறந்த ஆற்றலுடையானென்று சொல்லப்பட்டானல்லது, வெறும் பாழினின்று ஒன்றனைப் படைத்தலானாதல் படைப்புப் பொருளொன்றை வெறும் பாழாக்குதலானதல் அவ்வாறு சொல்லப்பட்டானல்லன் என்று உணர்க. அறிவின்றியும் அறியப்படாமலும் பொய்ம்மையாகக் கிடந்த நுண்ணுலகத் தினையே இறைவன், உயிர்களுக்கு உதவியாதற்பொருட்டு அசேதனவுருவப் பருப்பொருளுருவமாகப் படைத்தான். இத்தனையேயன்றி வெறும் பாழினின்றும் எம்மையெல்லாம் படைத்து ஒரு சிலரை இன்பப் பகுதியின் கண்ணும் ஒரு சிலரைத் துன்பப் பகுதியின் கண்ணும் நிறுத்துதல் இறைவனுக்கு நடுவுநிலை யாகாதெனக் கடாவுவார்க்கு

இறுக்கலாகாமையானும் அது பொருந்தாதென்றொழிக. து கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/292&oldid=1585904" இலிருந்து மீள்விக்கப்பட்டது