உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் 19

இனிப் படைப்பு என்பதுதான் யாதோவெனின் அதனை ருசிறிது விளக்குவாம். படைப்பு எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ ஒழுங்குபடுத்தலெனின்;- உறுப்பின்றிப் பிண்டமாகக் கிடந்த ஒருபொருளை உறுப்புடைத்தாக நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன் அரும் பேராற்றலால் நிகழ்த்தும் படைப்புக்கு ஒப்பாக எடுத்துக் காட்டப்படும் பொருள் ஒன்று இவ்வுலகி லில்லையாயினும், ஈண்டெடுத்துக்கொண்ட தருக்கம் இனிது விளங்குதற் பொருட்டு ஒருதாரணம் எடுத்துக்காட்டுவாம். தச்சுத் தொழில் செய்வான் ஒருவன் பிண்டமாகக்கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பல துண்டுகளாக ஈர்ந்து, அவற்றை யெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும் மிகுத்தும் பலவேறுபடுத்திப் பின் அத்துண்டு களையெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலி செய்யக் காண்கின்றோம். இங்ஙனம் பிண்டமாகக் கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து உறுப்புக் களையுடைய நாற்காலியாக ஒழுங்குபடுத்து முயற்சியே படைப்பாவதாம்.

இதுபோல், இறைவனும் உறுப்பின்றி வடிவமற்றுக் கிடந்த மிகுநுட்பப் பொருளாகிய மாயையை மலையுங் காடும் நாடுங் கடலுமாகிய உறுப்புடைய பருப்பொரு ளுலகமாக ஒழுங்குபட அமைத்து உயிர்களுக்கு உதவியாக வைத்தருளினான். இங்ஙனஞ் செய்யப்படுவதாகிய படைப்பும் மிகுநுண்ணிய உள்பொருண் மாயையிற் செயப்படுவதல்லது வெறும்பாழின்கட் செயப்படுவதன்றாம். ஆகவே, படைப்பு என்பது எக் காலத்தும் இருப்பதாகிய உள்பொருள் ன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்து அமைக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக் கூறியவாற்றான் இ னி து

விளங்கும்.

அற்றேல், அழிப்பு அல்லது சங்காரம் என் முயற்சியாற் உலகங்களெல்லாம் வெறும்பாழாய் அழிந்து படக் காண்கின்றோமாதலின் உள்பொருள் வெறும் பாழா யிற்றாம் பிறவெனின்;- அறியாது கடாயினாய், மலை கட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/293&oldid=1585905" இலிருந்து மீள்விக்கப்பட்டது