உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

நூலுரை

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1971இல் தொகுத்து வெளியிடப்பட்ட நூலாகும்.

அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும் முதலாக, சீர்திருத்தக் குறிப்புகள் ஈறாகப்

கட்டுரைகளையுடைய தொரு தொகை நூல் இது.

பதினொரு

இவற்றுள் சில, அடிகளார் சுவடிகளாக வெளியிட்டவை; கட்டுரையாக வரைந்தவை. பொழிவு செய்தவை எனப் பலவகைத் தொகை இது.

இயற்கை அழிவுகளை மாந்தரால் எவ்வாறும் நீக்க முடியாமையை விளக்கி நம் அறிவுக்குப் புலனாம் பொருள்களுள் ஒன்றாயினும் மாறா நிலையினவாய் ஒருபடித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை! இல்லை! என்கிறார்.

தோன்றி மறைபவை உண்மைப் பொருளாகா!

என்னும் மாறா உண்மைப் பொருளே இறைமை! என்பவற்றை விளக்குவது முதற்கட்டுரை.

மக்கட் பிறவியின் இழிபினை இறைவன் முன்னிலையில் எடுத்தெடுத்து விளம்பி அம்மக்கள் உள்ளத்தைத் தூய்மை செய்தற்கண் மாணிக்க வாசகர் திருவாசகத்திற்கு ஈடாவதொரு நூல் எம்மொழியிலும் இல்லை என்பது மாணிக்கவாசகர் மாட்சி.

அகர முதலாம் எழுத்துக்களின் தோற்றத்தையும் நுட்பத்தையும் மூச்சுச் செலவுக் குறைவையும் பொருள் நிறைவையும் காட்டுவது தமிழுன் ஒலி எழுத்துகள்.

தமிழின் பழமையைக் கூறுவது நான்காம் கட்டுரை. உயிரெழுத்தின்இயற்கை எளிமை இயக்கமும் அம்மா, அப்பா என்பதன் இயன் மென்மை வன்மை இயையும் காட்டித் தமிழின்பழமை மாட்சியை விளக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/30&oldid=1585616" இலிருந்து மீள்விக்கப்பட்டது