உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX

மறைமலையம் -19

குறளில் காணப்படும் சொற்களெல்லாம் தனித் தமிழ்ச் சொற்களே என்னும் அடிகளர், ஆதிபகவன் என்பதைப் பெற்றோர் பெயராகவே கொள்கிறார். புனைகதைகளின்மேல் கொண்ட நம்பிக்கை வழியது அதுவாம் (திருவள்ளுவர் திருக்குறள்).

ஆசிரியர் தொல்காப்பியனார் ஈட்டி வைத்த தொல் காப்பிய முழுமுதல் நூலின்கண் கலவைகாண்டல் ஒருவாற் றானும் இல்லை எனத் தொல்காப்பிய முழு முதன்மையில் கூறுகிறார்.

குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி எழுதத் தொடங்கியதும் 115ஆம் அடிவரையே முடிய வாய்த்துளது. உரையின் முற்பகுதியும் கிடைத்திலது.

பாட்டின் அழகையும் உருக்கும் தன்மையையும் விரியக் கூறிப் பொருட் பாகுபாடு செய்கிறார்.

நன்றின்பால் உய்ப்பதாம் விழுமிய காதற் குறிஞ்சி ஒழுக்கத்தினைப் பாட்டின் நுட்பம் முதிரச் சுவைக்குமாறு வைத்துப் பிரகத்தனுக்கு ஆசிரியர் அறிவுறுத்த வண்ணம் ஈண்டு ஒரு சிறிது விளக்கப்படலாயிற்று என்க என நிறைவதால் அடிகளா ர்முழுதுற எழுதிய பகுதி வாய்க்கவில்லை என்றே காள்ள வேண்டியுள்ளது.

ளந்தைக் கால வரலாறு என்பது அடிகளின் தொடக்க ருபதாண்டு வரலாறாகும். சிந்தனைக் கட்டுரைகள் என்னும் நூலில் இ டம் பெற்றது.

சென்னை

வடபகுதியில்

மணி

திருநாவுக்கரசரும்

தென்பகுதியில் திரு.வி.க.வும் இருகண்களாகத் திகழ்வதைச் சுட்டி, திருநாவுக்கரசின் சால்பு தொண்டு ஆயவற்றை விரித்துக் கூறும் கையறுநிலை 9ஆம் கட்டுரை.

பத்தாம் கட்டுரை, 'இந்தி பொதுமொழியா?' என்னும் சுவடியிணைப்பாம். அவ்வாறே சீர்திருத்தக் குறிப்புகள் என்னும் பதினொன்றாம் கட்டுரையாய் நூல்

சுவடி இணைப்பே

நிறைகின்றது.

பல்வேறு காலங்களில் பல்வேறு நிலைகளில் எழுத்தாகவும் மொழிவாகவும் வெளிப்பட்ட தொகை இஃதாம்.

-இரா. இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/31&oldid=1585617" இலிருந்து மீள்விக்கப்பட்டது