உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281

இராசமாணிக்கனார் பார்வையில்

(1876-1950)

LD 600 MLD 600 60W 1. கல்விப் பயிற்சி

முன்னுரை

தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் போலவே பெரும்புலவராக வாழ்ந்த சிலருள் மறைமலை அடிகள் ஒருவராவர். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மூன்று மொழிகளிலும் வல்லவர்; சைவத்திலும் தமிழிலும் சிறந்த ஆராய்ச்சி பெற்றவர்; பல ஆராய்ச்சி நூல்கள் எழுதியவர்; அவை அனைத்தையயும் கூடுமான வரை பிறமொழி கலவாத தமிழ் நடையிலேயே எழுதி வெளியிட்டவர்; ஐயரவர்கள் வெளியிட்ட பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களுக்குப் பொருத்தமான பொருள் கூறக் கூடியவர்; அரிய ஆராய்ச்சி நூல்கள் வரைந்தவர். அவருடைய செய்யுள் நூல் சங்கப் புலவராகிய நக்கீரனார் இயற்றிய திருமுருகாற்றுப் படையை ஒத்திருக்கின்றது எனின், அவரது பெருமையை என்னென்பது! சுருங்கக் கூறின், மறைமலை யடிகள் சிறந்த புலவர்; சிறந்த பேச்சாளர்; அரிய ஆராய்ச்சி யாளர்; மிக உயர்ந்த தமிழ்-ஆங்கில இதழாசிரியர்; செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்; செய்யுள்களுக்கு உரை வகுப்பதிலும் இணையற்றவர். அவரைப் போல இப்பண்பு களனைத்தும் ஒருங்கே பெற்ற பெருந்தமிழ்ப் புலவரைத் தமிழகம் கண்டதில்லை என்று அறிஞர் கூறுவர். இத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/314&oldid=1585926" இலிருந்து மீள்விக்கப்பட்டது