உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் 19

தமிழ்ப் பெரியார் வரலாற்றைத் தமிழ் மாணவர்களாகிய நீங்கள் படித்தறிய வேண்டுவது உங்கள் கடமை அல்லவா?

பிறப்பு

மறைமலையடிகள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த் நாகப்பட்டினத்திற்கு அடுத்த சிற்றூரில் 1876-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15-ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை என்பவர்; தாயார் சின்னம்மையார் என்பவர். அவர்கள் சோழியச் சைவ வேளாள மரபினர். அவர்களுக்குப் பல ஆண்டுகள் வரை பிள்ளைப்பேறு இல்லை. அதனால் சின்னம்மையார் திருக்கழுக்குன்றத்தில் நாற்பது நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். இறைவன் திருவருளால் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்குத் திருக்கழுக்குன்றத்தின் பெயராகிய வேதாசலம் என்பது இடப்பட்டது. அப்பெயரே தமிழில் மறைமலை எனப்படும். பின்னர் இவ்வாசிரியர் துறவு மேற்கொண்டபொழுது அடிகள் என்று அழைக்கப்பட்டார். அதனால் அப்பெரியார் மறைமலை அடிகள் என்று பிற்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டார். இச்சிறப்புப் பெயரையே நாமும் நூல் முழுவதும் ஆள்வோம்.

வளர்ப்பு

அடிகளின் பெற்றோர் நடுத்தர வளமுடைய குடும்பத்தினர்; ஆதலால் அடிகள் ஓரளவு செல்வமாக வளர்ந்துவந்தார். அவர் சிறு நடை நடந்து, மழலை மொழி பேசி, பெற்றோர் உள்ளங்களைக் கவர்ந்தார்; அவர்கள் உண்ணும்பொழுது ஓடிச் சென்று தம் சிறிய கைகளினால் உணவைத் தொட்டும் பிசைந்தும் துழாவியும், அவ்வுணவை எடுத்துப் பெற்றோர் வாயில் வைத்தும், தாம் எடுத்து உண்டும், பெற்றோரை மனம் மகிழச் செய்தார். கடவுள் அருளாள் பிறந்த அடிகளைப் பெற்றோர்கள் சீராட்டிப் பாராட்டி வளர்க்கலாயினர். இங்ஙனம் பெற்றோர்களால் பேணி வளர்க்கப்படுகையில், அவரது குழவிப் பருவத்திலேயே, தந்தையார் திடீரெனக்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/315&oldid=1585927" இலிருந்து மீள்விக்கப்பட்டது