உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில் மறைமலையடிகள்

283

தம்

காலமானார். எனவே, தாயார் சின்னம்மையார் பிள்ளைக்குத் தாயாராகவும் தந்தை யாராகவும் இருந்து, முழுஅன்பினையும் செலுத்தி வளர்த்து வந்தார்.

கல்விப் பயிற்சி

ம்

அடிகள் ஐந்து வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 'விளையும் பயிர் முளையில் தெரியும்’ என்னும் பழமொழிக்கேற்ப, அடிகள் அச் சிறுபருவத் திலேயே அறிவு நுட்பம் வாய்க்கப் பெற்றிருந்தார்; ஆசிரியர் வகுப்பில் கற்பித்தவற்றை உடனே ஒப்பிக்கும் ஆற்றல் பெற்று இருந்தார். எப்பாடத்தையும் ஒரு முறை படித்தவுடன் அதன் விவரங்களை எடுத்துக்கூறும் வன்மை பெற்றிருந்தார். எல்லா மாணவரிடத்தும் மிக்க அன்பும் மரியாதையும் காட்டிப்

கிவந்தார்; ஆசிரியன் மாரிடத்து மிக்க பயத்துடனும் பக்தியுடனும் பழகிவந்தார். அவருடைய இத்தகைய சீரிய பண்புகள் ஆசிரியரையும் மாணவர்களையும் ஒருங்கே கவர்ந்தன. இக்கவர்ச்சியால் நாளடைவில் அவர் 'மாணவர் தலைவர்’ ஆனார்.

தமிழ்நூற் பயிற்சி

அடிகள் தம் பதினாறாம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் நூல்களைப் படிக்கவேண்டும் என்று விரும்பினார். அவர் ஒரு நாள் நாகைக் கடற்கரையில் அமர்ந்து, கீழ்வருமாறு தமக்குள் எண்ணினார்:

"ஒவ்வொருவனும் தன் தாய்மொழி நூல்களை நன்றாய்ப் படிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்; அவ்வாறு படிக்க வேண்டுவது அவனது பிறப்புரிமையாகும். பிழைப்புக்காக வேறு எத்தகைய கல்வியைப் பயின்றாலும் தாய்மொழி வளர்ச்சி கருதித் தாய்மொழியைக் கற்பதும், அந்நூல்களிலுள்ள அருமை பெருமைகளைக் கற்று இன்புறுதலும் அவசியமாகும். இம்முறைப்படி தமிழனாகிய நான் என் தாய்மொழி நூல்களைக் கற்க விரும்புகின்றேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/316&oldid=1585928" இலிருந்து மீள்விக்கப்பட்டது