உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் 19

அவற்றைக் கற்பிக்கத் தக்க ஆசிரியரைக் காணவேண்டும்;

அவரை எவ்வாறேனும்

வேண்டிக்கொண்டு

அவர்

மாணவராதல் வேண்டும்."

தமிழுக்குப் பெயர்போன நாகை

நாகப்பட்டினம் நெடுங்காலமாகவே தமிழுக்குப் பெயர் போனது. இதனை விளக்கக் கீழ்வரும் செவி வழிச் செய்தி அறிஞரால் கூறப்படுகிறது. ஒருமுறை காளமேகப் புலவர் நாகை சென்றார்; “சோறு விற்குமிடம் எது?” என்று, ஒரு தருவில் பாக்கு வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கேட்டார்; அதற்கு அவர்கள் நகைத்து, "சோறு தொண்டையில் விற்கும்,” என்று குறும்பாகப் பதில் கூறினார்கள். அதனால் வெகுண்ட காளமேகம் அருகில் கிடந்த அடுப்புக்கரி ஒன்றை எடுத்து, எதிரிலிருந்த ஒரு வீட்டுச் சுவர் மீது,

“பாக்குத் தெறித்துவிளை யாடுசிறு பாலகர்க்கு நாக்கு’

.

என்பது வரை எழுதி, பசி கடுகியதால், உண்டுவந்து பிறகு பிள்ளைகளை வைது எழுத வேண்டும் என்று, இரண்டாம் ம் வரியை அப்படியே யே விட்டுவி விட்டுவிட்டுச் சென்றார். அவர் சயலைக் கவனித்துக்கொண்டிருந்த பிள்ளைகள், அவர் சென்ற பின், சுவர் அருகே வந்து, அவர் எழுதி விட்டுச் சன்றதைப் படித்தனர். வாக்கியம் குறையாக இருத்தலைப் பார்த்து, ஒரு கரித்துண்டை எடுத்து,

"நாக்குத் தமிழ்விளங்க நாகேசா,”

என்று இரண்டாம் வரியை முடித்துவிட்டு, வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தனர்.

"நாக்குத் தெரித்துவிழ நாகேசா”

என்று இரண்டாம் வரியை முடிக்கவேண்டும் என்று திரும்பி வந்த காளமேகம், தாம் விட்டுச் சென்றது நிறைவாக்கப் பட்டிருத்தலைக் கண்டார்; அது பிள்ளைகள் செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/317&oldid=1585929" இலிருந்து மீள்விக்கப்பட்டது