உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில் மறைமலையடிகள்

285

என்பதை அறிந்தார்; அவர்தம் தமிழறிவிற்கு வியந்தார்; அப்பிள்ளைகளை அருகில் அழைத்து ஆசீர்வதித்துச் சன்றார்.

சிரியர் நாராயணசாமிப் பிள்ளையவர்கள்

ஆசிரியர்

இத்தகைய தமிழ்ப்பற்று மிகுந்த நாகையில் படித்த அடிகள், தமிழிற் புலமை பெறவேண்டும் என்று விரும்பியதில் வியப்பில்லை அன்றோ? அடிகள் தக்க ஆசிரியரைத் தேடிவந்த பொழுது, திருவாளர் நாராயணசாமிப் பிள்ளை என்பவர் பெயரைக் கேள்விப்பட்டார். பிள்ளையவர்கள்

.

நாகையில் புத்தகக் கடை வைத்திருந்தார். அவர் திருவாங்கூர்ச் சீமையில் சிறிது காலம் இருந்தார். அப்பொழுது அவரிடம், 'மனோன் மணீயம்' என்னும் நாடகநூலைப் பிற்காலத்தில் எழுதி வெளியிட்ட சுந்தரம் பிள்ளைஎன்பவர் தமிழ் கற்றார். நாகையிலும் பலர் அவரிடம் தமிழ் பயின்றனர். அக்காலத்தில் வெளியிடப்பட்டிருந்த எல்லாத் தமிழ் நூல்களும் அவரது புத்தகக் கடையில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. ஆதலால் மாணவர்கள் புத்தகங்களுக்காகத் துன்பமடையவில்லை; வேண்டிய நூல்களை விலைகொடுத்து வாங்கி ஆசிரியரிடம் நன்கு பயின்றனர்.

பிள்ளையவர்கள் தமது இளமைப் பருவத்தில் பெரும் புலவர் ஒருவரிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல் களையும், பனையோலை ஏடுகளாய்க் கிடந்த சங்க நூல்களை யும், இடைக்காலத்துச் சமய நூல்களையும், பிற்காலத்து இதிகாசப்புராணங்களையும் நன்கு பயின்றவர். அவர் அக்கால முறைப்படி இலக்கண சூத்திரங்களையும் ஆயிரக்கணக்கான செய்யுட்களையும் மனப்பாடம் செய்து பெயர் பெற்றவர். பெரும்பாலும் இலக்கண நூல்களைப் பாராமலேயே அவர் பாடஞ் சொல்லுதல் வழக்கம் எனின், அவரது இலக்கண அறிவை என்னென்பது!

அடிகள் பிள்ளையவர்களின் மாணவர்

தமக்குரிய ஆசிரியரைத் தேடி அலைந்த அடிகள் தமது நல்வினை காரணமாக, மேற்சொன்ன பிள்ளையவர்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/318&oldid=1585930" இலிருந்து மீள்விக்கப்பட்டது