உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

  • மறைமலையம் 19

வந்து சேர்ந்தார்; அவரது பெரும் புலமையைக் கேள்வியுற்றவர் ஆதலின், அவரை நேரிற் கண்டதும், அவர் திருவடிகளில் தம் முடிபட வீழ்ந்து பணிந்தார். சிவந்த உடல்- திருநீற்றுப் பொலிவு பெற்ற திருமுகம்-பிறரை வசீகரிக்கும் விழிகள்-இனிய பேச்சு இவற்றை உடைய இளைஞர் தம்மைப் பணிந்ததைக் கண்ட பிள்ளையவர்கள், ஆசிகூறி அருகில் அமரச் செய்தார்; அவரது வரலாற்றை வினவினார். அடிகள் தமது நிலையை விளக்கமாகக் கூறித் தாம் வந்த நோக்கத்தையும் கூறினார். தமிழ் கற்க வேண்டும் என்பதில் அடிகளுக்கிருந்த அவாவினைக் கண்ட பிள்ளையவர்கள், எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவர் அடிகளை அன்புடன் நோக்கி, “தம்பீ! மாணவர் பலர் என்னிடம் தமிழ் பயின்றுள்ளனர்; ஆயின், தமிழ் கற்க வேண்டும் என்பதை உன்னைப்போல் சிறந்த குறிக்கோளாகக் கொண்டிலர். நீ அதனைச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டிருத்தலால், உனது பிற்கால வாழ்வில் தமிழகம் போற்றத்தகும் பெரும் பேராசிரிய னாக விளங்குதல் உறுதி”, என்று வருவது கூறி ஆசீர் வதித்தனர். அன்று முதல், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையர் களிடம் டாக்டர் உ.வே. சாமி நாதையர் பேரார்வத்துடன் தமிழ் கற்றாற்போல, நாகைப் பிள்ளையவர்களிடம் அடிகள் தமிழ் கற்கலானார்.

உண்மை மாணவர்

L

அடிகள் பிள்ளையவர்களைத் தம்மை வாழ்விக்க வந்த கடவுளாகவே கருதினார்; நாள்தோறும் பிள்ளையவர் களிடம் இருந்து பழகி அவருக்கு அணுக்கத் தொண்டாரானார்; அவருடைய குறிப்பறிந்து அவர் விரும்பின அனைத்தும் செய்தார்; இளைஞரது தமிழ்ப் பற்றும், ஆசிரியரன்பும், பணிவும், எதிர்கால வாழ்க்கையில் விருப்பமும், சமயத்தில் ஆழ்ந்த பற்றும் ஆகிய பண்புகள் அனைத்தையும் கண்டு உள்ளம் இளகிய பிள்ளையவர்கள், தாம் ஈன்ற மகனைப் போலவே அடிகளைக் கருதலானார்; நாள்தோறும் தமிழ்ப்பாடங்களை நன்முறையில் கற்பிக்கலானார். நான்காண்டுகட்குள் அடிகள் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/319&oldid=1585931" இலிருந்து மீள்விக்கப்பட்டது