உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில் மறைமலையடிகள்

287

நாலடியார், திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் பழுதறப் படித்து முடித்தார்; தம் ஆசிரியரைப் போலவே லக்கண சூத்திரங்களையும் சிறந்த இலக்கிய நூல்களையும் நெட்டுருச் செய்தார்.

அப்பருவத்திலேயே பொதுநலத்தொண்டு

அடிகள் பிள்ளையவர்களிடம் ஒவ்வொரு நூலாகப் படித்து வரும்பொழுது அதனைப் பிற மாணவர்க்குக் கற்பிக்க விரும்பினார்; அதற்கென ‘இந்து மதாபிமான சங்கம்’ என்னும் பெயருடன் கழகம் ஒன்றைத் தோற்றுவித்தார்; தம்முடன் பள்ளியில் படித்து வந்த மாணவர்க்குத் தமிழ் அ அறிவையும் சமய உணர்ச்சியையும் ஊட்ட அக்கழகத்தினைப் பயன்படுத்தினார். தாம் ஆசிரியரிடம் ஒன்றைப் பாடம் கற்பதும், அதனையே தாம் ஆசிரியராக இருந்து பிறர்க்குக் கற்பிப்பதும் ஆகிய முயற்சி அவரைச் சில ஆண்டுகட் குள்ளாகவே பெரும் புலவராகச் செய்தது; பாடம் கற்பிக்கும் சிறந்த ஆசிரியராகவும் செய்தது. இப்பயிற்சியால் அவர் இருபது வயதிற்குள் பெரும் புலவருள் ஒருவராகவும் சிறந்த பேச்சாளராகவும் கருதப்பட்டார்.

அடிகள் தமிழ் நூல்களைப் படிப்பதோடு ஆங்கில நூல்களையும் நாடோறும் படித்துவந்தார். படிப்படியாக ஆங்கிலச் செய்யுள் நூல்கள் பலவற்றையும் வசன நூல்கள் பலவற்றையும் படித்துமுடித்தார். அப்பயிற்சியின் பயனாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் ஆற்றலும் எழுதும் ஆற்றலும் பெற்றார்.

திருமணம்

சின்னம்மையார் தம் செல்வ மைந்தர்க்கு, அவரது பதினேழாம் வயதில் திருமணம் செய்து வைத்தார். அவருக்கு வாய்த்த மனைவியாரது பெயர் சௌந்தரவல்லி என்பது. அவ்வம்மையார் அடிகளை மணந்துகொண்ட அந்நாள் தொட்டுத் தாம் இறக்கும் வரை (ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள்) பல்லோர் பாராட்டக் கணவர்க்கு ஏற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/320&oldid=1585932" இலிருந்து மீள்விக்கப்பட்டது