உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் 19

காரிகையராய் நடந்துவந்தார். அவருடைய பணிவு, கணவர் பக்தி, தம் இல்லத்திற்கு வந்தோரிடம் காட்டும் அன்பு, விருந்து உபசரிப்பு இன்ன பிறவும் அடிகள் வீட்டில் ஒருமுறை பழகிய வரும் மறத்தல் இயலாது. சுருங்கக் கூறின், சௌந்தர வல்லி அம்மையாரைப் போன்ற உண்மை மனைவிமாரை காணுதல் அரிது. பிள்ளைகளைப் பேணுவதில் அத்தகைய உத்தம தாய்மாரைக் காணுதலும் அருமை.

சிந்தாமணி

அடிகளின் பதினெட்டாம் வயதில் சௌந்தரவல்லி அம்மையார் ஒரு பெண்மகவைப் பெற்றார். அப்பொழுது அடிகள் மிக விரும்பிப் படித்துவந்த சிந்தாமணி என்னும் தமிழ்ப் பெருங்காவியத்தின் பெயரையே அப் பெண் குழந்தைக்கு இட்டு மகிழ்ந்தார். அடிகள் அந்நிலையிலும் பிள்ளையவர்களிடம் இடைவிடாது தமிழ் பயின்றுவந்தார்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/321&oldid=1585933" இலிருந்து மீள்விக்கப்பட்டது