உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

2. பலவகைப் பணிகள்

சோமசுந்தர நாயகர்

சோமசுந்தர நாயகர் சென்னையைச் சேர்ந்தவர்; சிறந்த சைவசித்தாந்தி; சைவசித்தாந்த உண்மைகளைக் கேட்பவர் உள்ளத்தில் நன்கு பதியவைக்கும் சொல் வல்லமை உள்ளவர்; அவருடைய சொற்பொழிவுகள் தமிழ் நாடெங்கும் நடை பெற்றன; சைவத்தில் சிறந்த சொற்பொழிவாளர் என்று மக்கள் அவரைப் பாராட்டினர்.

நாகையில் நாயகர்

நாகையில் சைவசித்தாந்த சபை ஒன்று இருந்தது. நமது அடிகளும் அதில் உறுப்பினராயிருந்தார். நாயகர், நாகைச் சைவர் வேண்டுகோளின்படி நாகைக்கு வந்தார்; அங்குச் சமயச் சொற்பொழிவுகள் பல செய்தார். அடிகள் அவை அனைத்தையும் விடாமல் கேட்டுவந்தார்; நாயகருடைய த மிழன்பினையும் சைவ நூல்களின் அறிவையும் கண்டு வியப்பும் மரியாதையும் கொண்டார்; நாயகரைத் தமக்கேற்ற சைவசமய ஆசிரியராக மனத்தில் கொண்டார்.

சமயப் போராட்டத்தில் அடிகள்

நாகையில் சஜ்ஜனப் பத்திரிகை என்னும் பெயருடன் வாரந்தோறும் பத்திரிகை ஒன்று வெளிவந்தது. வேதாந்த சாத்திரங்களில் பற்றுக்கொண்ட ஒருவர், நாயகரின் சைவ சித்தாந்த கூற்றுகள் சிலவற்றை மறுத்துப் பல கட்டுரைகள் எழுதிவந்தார். அடிகள் அக்கட்டுரைகளைக் கூர்ந்து படித்தார்; நாயகர் கூறிய கருத்துக்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தார்; நாயகருடைய கருத்துக்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/322&oldid=1585934" இலிருந்து மீள்விக்கப்பட்டது