உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் 19

சிறந்தவை என்பதை நன்குணர்ந்தார்; தாம் உணர்ந்த உண்மையைத் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

நாயகர் பாராட்டு

‘முருகவேள்’ என்னும் புனைப்பெயருடன் அடிகள்

எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தும் சென்னையிலிருந்த நாயகர் படித்தார்; அவை வாதத்திறமையுடன் ஒழுங்கான முறையில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டார். சைவசித்தாந்த உண்மைகளை உறுதிப்படுத்திய அக்கட்டுரைகளை எழுதிய 'முருகவேள்' யாவர்? என்பதை அறிய விரும்பினார்; நாகைச் சைவசித்தாந்த சபையாருக்கு சபையாருக்கு அது குறித்துக் அது குறித்துக் கடிதம் எழுதினார். அச்சபையினர் அடிகளின் வரலாற்றைத் தெளிவாக எழுதி அனுப்பினர். சில மாதங்களுக்குப் பிறகு நாயகர் நாகை சென்றார்; அடிகளை நேரிற் கண்டு அன்போடு அணைத்துக் கொண்டார். அடிகள் சென்னையிலிருந்தால் சைவ சித்தாந்தம் வளரத் தொண்டு புரியலாம் என்று நாயகர் அறிவித்தார்; அடிகளை விரைவில் சென்னைக்கு வருமாறு ஏற்பாடு செய்வதாக நாயகர் வாக்களித்தார். அன்று முதல் அடிகள் நாயகரைத் தம் சமயக் குருவாகக் கொண்டார்.

கட்டுரை ஆசிரியர்

L

அடிகள் மாணவராக இருந்தபொழுது, காரைக்காலில் இருந்து வெளிவந்த 'திராவிட மஞ்சரி, என்னும் வாரத் தாளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; பிறகு நாகையில் இருந்து வெளிவந்த ‘நீலலோசனி' என்னும் வாரத்தாளிலும் கட்டுரைகள் வரைந்து வெளியிட்டார்; தமிழ் இலக்கியக் கட்டுரைகளும் சைவசித்தாந்த கட்டுரைகளும் அவரால் எழுதி வெளியிடப்பட்டன. 'நாகை-வேதாசலம் பிள்ளை' என்னும் பெயருடன் வெளிவந்த அக்கட்டுரைகள் தமிழ் நாட்டு ன் அறிஞரை மகிழ்வித்தன; அடிகளது புலமைத் திறனையும் நன்கு வெளிப்படுத்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/323&oldid=1585935" இலிருந்து மீள்விக்கப்பட்டது