உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில் மறைமலையடிகள்

சுந்தரம் பிள்ளையவர்களுடன் தொடர்பு

291

திருவனந்தபுரம் அரசர் கல்லூரிப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் என்னும் தமிழ் நாடக நூலை எழுதி வெளியிட்டார். அதனைப் படித்த அடிகள் அந்நூலைப் பாராட்டிப் பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். பிள்ளையவர்கள் இளமையில் நாகை-நாராயணசாமிப் பிள்ளையவர்களிடம் தமிழ் படித்தவர் அல்லவா? அதனால் அடிகளும் தம்மாசிரியரிடம் தமிழ் பயின்றவர் என்பதை உணர்ந்த பிள்ளையவர்கள் மிக்க இன்புற்றார்; அடிகளுடன் நெருங்கிய கடிதப் போக்குவரத்தை மேற்கொண்டார்.

பிள்ளையவர்கள் அழைப்பு

பிள்ளையவர்கள் தம் ஆசிரியரையும் அடிகளையும் திருவனந்தபுரம் வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட இருவரும் நாகையிலிருந்து புறப்பட்டுத் திருவனந்தபுரம் சென்று பிள்ளையவர்களைக் கண்டனர்; அவர் விருந்தினராகத் தங்கினர். பிள்ளையவர்கள் அடிகளோடு பேசிப்பேசி அவருடைய தமிழ் இலக்கிய அறிவையும் சமய இலக்கிய அறிவையும் நன்குணர்ந்து பாராட்டினார்; தம் ஆசிரியரைப் பார்த்து, "இந்த இளம் வயதில் பரும் புலவராகவுள்ள (அடிகள்) பிற்காலத்தில் சிறந்த பேராசிரியராகத் திகழ்வார்” என்று சோதிடம் கூறி மகிழ்ந்தார். ஆசிரியரும் அடிகளும் சுந்தரனார் இல்லத்தில் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகு, அவரிடம் பிரியா விடை பெற்று நாகை மீண்டனர்.

இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/324&oldid=1585936" இலிருந்து மீள்விக்கப்பட்டது