உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

3. தமிழ்ப் பேராசிரியர்

திருவனந்தபுரத்தில் தமிழாசிரியர்

சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் அடிகளுக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டு வளர்ந்துவந்தது. சில மாதங்கள் கழிந்த பிறகு பிள்ளையவர்கள் அடிகளைத் திருவனந்தபுரத்திற்கு வருமாறு அழைத்தார். அடிகள் அவர் அழைப்புக்கிணங்கித் திருவனந்தபுரம் சென்றார். பிள்ளையவர்கள் அந்நகரத் திலிருந்த ஆங்கிலப் பள்ளியொன்றில் தமிழாசிரியராக வேலை பார்க்குமாறு ஏற்பாடு செய்தார். அடிகள் அவ்வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றார்; மாணவர் மதித்துப் பாராட்டப் பாடங் கற்பித்தார். ஆயின், அந்நகரத் தட்ப-வெப்ப நிலை அவரது உடல்நலத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் இரண்டரை மாத காலமே தமிழாசிரியர் வேலையில் இருந்தார். அதன் பிறகு வேலையைவிட்டு நாகைக்குச் சன்றுவிட்டார். ஆயினும் அவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரை மாத காலத்தில் அவர் செய்த நற்பணிகள் பலவாகும். அவர் திருவனந்தபுரத்தில் சைவசித்தாந்த சாற்பொழிவுகள் பல செய்தார்; சங்கத் தமிழ் நூல்கள் பற்றி இலக்கியச் சொற்பொழிவுகள் பல ஆற்றினார்; திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் நாடகத் தமிழ் பற்றி ஒரு விரிவுரை ரை ஆற்றினார். அவருடைய சொற்பொழிவுகள் அந்நகர மக்களுக்குத் தமிழிலும் சைவத்திலும் நல்ல பற்றை உண்டாக்கின.

L

அடிகள்-பத்திரிகை ஆசிரியர்

ச்

திருவாளர் J.M. நல்லசாமிப் பிள்ளை என்பவர் அக்காலத்திலிருந்த மாவட்ட நீதிபதிகளுள் ஒருவர். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/325&oldid=1585937" இலிருந்து மீள்விக்கப்பட்டது