உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில்

மறைமலையடிகள்

.

293

சைவசித்தாந்த சாத்திரங்களில் பெரும்புலமை பெற்றவர்; சைவசித்தாந்த உண்மைகள் நாடு முழுவதும் பரவவேண்டும்- அதற்காக ஆங்கிலத் தாள் ஒன்றை நடத்தவேண்டும் என்று விரும்பினார்;அவ்வாறே அச்சமயக் கருத்துக்கள் பரவத் மிழ்த்தாள் ஒன்றையும் நடத்த விரும்பினார். அதனைத் தம்மோடு உடன் இருந்து நடத்தத்தக்க ஒருவரைத் தேடினார். சோமசுந்தர நாயகர் நமது அடிகளைச் சிபாரிசு செய்தனர். பிளையவர்கள் அடிகளைக் கண்டு கண்டு உரையாடி அவரது பெரும் புலமையை நன்கறிந்து மகிழ்ந்தார். அவரைத் தம்முடன் அழைத்துச் சென்று பத்திரிகை தொடங்கினார். அடிகள் முதல் ஐந்து மாத இதழ்கட்கு மட்டும் ஆசிரியராக இருந்தார்; பிறகு அவ்வேலையை விட்டு நாகை மீண்டார்.

பரிதிமாற் கலைஞர்

.

சன்னைக் கிறித்தவக் கல்லூரியில் அக்காலத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாஸ்திரியார் என்பவர். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த புலமை உடையவர்; தமிழ் வளர்ச்சியில் அளவு கடந்த ஆர்வம் உடையவர். எப்பொழுதும் செந்தமிழிலேயே பேசும் நற்பழக்கம் உடையவர்; தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து 'தமிழ்மொழி வரலாறு' என்னும் நூலை என்னும் நூலை எழுதியவர்; தமிழில் நாடக நூல் இல்லை ல்லை என்னும் குறையை நீக்க ரூபாவதி, கலாவதி முதலிய நாடக நூல்களை எழுதியவர்; ஆங்கிலச் செய்யுட்கள் பலவற்றைத் தமிழ்ச் செய்யுட்களாகச் செய்து புகழ் பெற்றவர்; மாணவர் பலரை வீட்டில் வைத்துக் கொண்டு வருவாய் சிறிதும் இல்லாமல் நாள்தோறும் கற்பித்துவந்தவர். இத்தகைய சிறந்த பண்புகளால் அவரைக் கல்லூரி அதிகாரிகளும் பிறரும் பெரிதும் போற்றிவந்தனர். அவரது வடமொழிப் பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழில் மாற்றிக்கொண்டதைக் கண்ட தமிழ் அறிஞர் அவரைப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

அடிகள் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியர்

நிலையில்

பரிதிமாற் கலைஞருக்கு அடுத்த தமிழாசிரியர் ஒருவர் தேவைப்பட்டார். அப்பதவிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/326&oldid=1585938" இலிருந்து மீள்விக்கப்பட்டது