உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் 19

விண்ணப்பங்கள் பல வந்தன. கல்லூரித் தலைவரான மில்லர் துரை விண்ணப்பங் களை யெல்லாம் சாஸ்திரி யாரிடமே கொடுத்துத் தக்காரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்தார். சாஸ்திரியார் சிலரைக் கல்லூரிக்கு வரவழைத்து, வகுப்பில் பாடம் நடத்துமாறு ஏற்பாடு செய்தார். அங்ஙனம் பாடம் நடத்திய புலவருள் நம் அடிகளும் ஒருவர். சாஸ்திரியார் அவரையே தமக்கு உதவி ஆசிரியராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அன்று முதல் கலைஞரும் அடிகளும் தமிழக் கடலில் இறங்கி நீந்தலாயினர். டாக்டர் மில்லர் போன்ற ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டுறவால் அடிகள் நாடோறும் ஆங்கில அறிவை நன்கு வளர்த்துவந்தார். ஆங்கிலத்தில் மாதத்தாள் நடத்தும் வல்லமை பெற்றமைக்குக் காரணம், கிறித்தவக் கல்லூரி நூல் நிலையத்திலிருந்து அவர் கற்ற எண்ணிறந்த ஆங்கில நூல்களே என்னலாம்.

அவர்

சூரியநாராயண சாஸ்திரியார் தம் பெயரைத் தமிழில் மாற்றி வைத்துக்கொண்டதைக் கண்ட பின், அடிகள், வேதாசலம் என்னும் தமது பெயரையும் மறைமலை எனத் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டார். எனினும், அவர் ஆ சிரியராக இருந்தபொழுது நாகை-சொ. வேதாசலம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டுவந்தார். சாஸ்திரியாருடைய சேர்க்கை யால் அடிகளுக்குத் தனித் தமிழ்ப்பற்று வளர்ந்தது. 'தமிழ் தனக்கென இலக்கண வரம்புடைய மிகப் பழைய மொழி; பெரும்பாலான எண்ணங்களை வெளியிட அம்மொழியில் சொற்களுண்டு; சிற்சில சந்தர்ப்பங்களில் பிறமொழிச் சொற்கள் சிலவற்றைக் கடன் வாங்குதல் ன் போதும். ஆகவே, பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலவாமலே தமிழ் எழுதலாம் என்னும் முடிவைச் சாஸ்திரியாரும் அடிகளும் ஒப்புக்கொண்டனர். அன்று முதல் அடிகள் கூடுமான வரையில் செந்தமிழ்ச் சொற்களைக் கொண்டே கட்டுரைகளையும் நூல்களையும் எழுதலாயினர்.* மாணவர் கருத்தைக் கவர்ந்த ஆசிரியர்

ஏறத்தாழ இருபது அல்லது இருபத்தொரு வயதுடை அடிகள் நெற்றியில் திருநீறணிந்து வகுப்பிற்குச் செல்வதும், பண்ணோடு பாடல்களைப் பாடுவதும், செய்யுளில் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/327&oldid=1585939" இலிருந்து மீள்விக்கப்பட்டது