உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில்

மறைமலையடிகள்

295

அமைதியையும் பொருளழகையும் எடுத்துக் கூறுவதும் பல மேற்கோள்களைத் தந்து செய்யுட் கருத்தை விளக்குவதும், ஆங்கிலம் வடமொழி இவைகளிலிருந்து ஒப்புநோக்குப் பகுதி களைக் கொடுத்தலும் மாணவரைப் பெரிதும் மகிழ்வித்தன. அவர்கள் அவரது பெரும் புலமையையும் கற்பிக்கும் ஆற்றலையும் நன்குணர்ந்து பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்யுள் நூல் ஆசிரியர்

அடிகள்

கல்லூரி ஆசிரியராக இருந்தபொழுது சன்னை அரண்மனைக்காரத் தெருவில் குடியிருந்தார். அவரது பள்ளி வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் ஓரளவு வறுமைத் துன்பம் குடும்பத்தில் தலை காட்டியது. ஒருமுறை அவர் கொடிய வயிற்று வலியால் துன்புற்றார். அப்பொழுது அவர் தம் நோயை நீக்குமாறு முருகப் பெருமானை வேண்டினார். நோய் நீங்கியதும் அவர் முருகக் கடவுளுக்குத் தம் நன்றியை அறிவிக்க ஒரு மும்மணிக்கோவை நூல் பாடத் தொடங்கினார். எனினும் அந்நூல் தொடர்ந்து பாடப்படாமல் பல காரணங்களால் இடையில் விடப்பட்டு இ ஒன்றரை ஆண்டுகட்குப் பிறகு நூலாக முற்றுப் பெற்றது. அதன் பெயர் திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை என்பது. அந்நூல் 1366 அடிகளை உடையது; சொற்சுவையும் பொருட்சுவையும் பொருந்தியது. பழந்தமிழ் நூல்களைப் போன்ற நடையும் அழகும் அமைந்தது.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/328&oldid=1585940" இலிருந்து மீள்விக்கப்பட்டது