உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

4. அடிகளின் பிற்கால வாழ்க்கை

அடிகளிடம் பயின்ற மாணவர்கள்

பரிதிமாற் கலைஞர் 1903-ஆம் ஆண்டு காலமானார். மறைமலையடிகள் அவரது பிரிவால் மிக்க துயருற்றார்; அதற்குப்பின் அக்கல்லூரியில் ஆசிரியராக இருப்பதை வெறுத்தார். சென்னை நகர நெருக்கடி வாழ்க்கை அவரது உத்தியோக வெறுப்பை வளர்த்தது.

ம்

ம்

எனினும் அவர் 1911-ஆம் ஆண்டுவரை வேண்டா வெறுப்புடன் ஆசிரியர் வேலை பார்த்தார்; அக்காலத்தில் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி முதலிய கல்லூரி வகுப்புகளுக்குத் தேவையான ஆராய்ச்சி நூல் களும் வேறு பல நூல்களும் எழுதி வெளியிட்டார். அந்நூல்கள் நாடு முழுவதும் பரவின; கடல் கடந்த தமிழரிடத்தும் பரவின. அதனால் அவர்க்கு யாண்டும் பெரும் புகழ் ஏற்பட்டது. அவர் முப்பது வயதிற்குள் சிறந்த நல்லாசிரியர் என்றும் செய்யு ளாசிரியர் என்றும் உரையாசிரியர் என்றும் ஆராய்ச்சி அறிஞர் என்றும் பண்பட்ட சொற்பொழிவாளர் என்றும் பாராட்டப் பெற்றார். அக்காலத்தில் அவரிடம் கல்வி பயின்று தமிழ்ப்பற்றுக் கொண்ட மாணவர் பலர். அவருள் குறிப்பிடத் தக்கார், தமிழறிஞர் என்று ப்பொழுது பாராட்டப்படும் ச. சோமசுந்தர பாரதியார் பி.ஏ.பி.எல்., S. வையாபுரிப் பிள்ளை பி. ஏ., பி எல்., T. K. சிதம்பரநாத முதலியார் பி.ஏ., பி. எல்., C. N. முத்துரங்க முதலியார் பி.ஏ., பி. எல். முதலியோராவர். இவர்கள் அல்லாமல் அடிகள் இல்லத்திற்குச் சென்று தமிழ் பயின்றவர் பலர். அவருள் முதல்வர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியரா

நாவலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/329&oldid=1585941" இலிருந்து மீள்விக்கப்பட்டது