உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில்

மறைமலையடிகள்

297

யிருந்த மணி. திருநாவுக்கரசு முதலியார் என்பவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாகப் பல நூல்களை எழுதி வெளி யிட்டவரும், “செந்தமிழ்ச் செல்வி” ஆசிரியராக இருந்தவரும் சிறந்த சைவசித்தாந்த சொற்பொழிவாளரும் ஆ கிய திரு. இள அழகனார் என்பவர் ஒருவர். சிறந்த நாவல்களை எழுதி வளியிட் நாகை-தண்ட பாணிப் பிள்ளை, நாகை-கோபால கிருட்டினப் பிள்ளை

முதலியோரும் அடிகளின் மாணவர்களே.

அடிகளார் குடும்பம்

அடிகளுக்குப் பெண்மக்கள் மூவரும் ஆண்மக்கள் நால்வரும் தோன்றினர். பல அரிய தமிழ் நூல்களை எழுதி வெளியிட்ட திருவாட்டி-நீலாம்பிகை அம்மையார் என்பவர் அடிகளாரது இரண்டாம் மகளார் ஆவர். முதல் மகளார் பல ஆண்டுகட்கு முன்னரே காலமானார். மூன்றாம் மகளார் திருவாட்டி-திரிபுரசுந்தரி என்பவராவர். இவர் சென்னை நகராண்மைப் பெண்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருந்துவருகின்றார். ஆண்மக்கள் நால்வருள் முன்னவர் திருஞானசம்பந்தர். அவர் மலேயாவில்

அலுவல் பார்க்கின்றார். அடுத்தவர் பெயர் மாணிக்கவாசகர் என்பது. அவரும் சென்னை நகராண்மைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கின்றார். அடுத்தவர் திருநாவுக்கரசர் என்பவர். இவர் தமிழ்ப் புலவர்; மறை திருநாவுக்கரசு என்று நாட்டவரால் அழைக்கப்படுபவர். இவர் சிறந்த பேச்சாளர்; சைவ சயமச் சொற்பொழிவாளர். நான்காம் மகனார் சுந்தரமூர்த்தி என்பவர். இவர் சென்னையில் மருத்துவராக இருக்கின்றார். மறைமலை ‘அடிகள்'

மேற்சொன்ன எல்லா மக்களின் தோற்றத்தின் பிறகு, அடிகள் சைவத்தையும் தமிழையும் நாட்டிற் பரவச்செய்ய உறுதிகொண்டார்; அதற்குக் குடும்பப் பொறுப்பில் இருந்து விடுதலை அடைதல் நலமெனக் கருதினார்; வீட்டிலிருந்த படியே இல்வாழ்க்கை அளவில் துறவு பூண்டார்; காவி உடை அணிந்துகொண்டார். அதுமுதல் மக்கள் அவரை மறைமலை அடிகள் என்று அழைப்பா ராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/330&oldid=1585942" இலிருந்து மீள்விக்கப்பட்டது