உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் -19

பல்லாவரத்தில் மாளிகை

அடிகள் கல்லூரி ஆசிரியர் வேலையிலிருந்து

விலகியதும் தமிழகம், இலங்கை முதலிய பகுதிகளில் சுற்றித் தமிழ், சைவம் ஆகிய இரண்டையும் பற்றிப் பல சொற்பொழிவுகள் செய்தார். அவரது பேச்சிலீடுபட்ட பிரபுக்களும் வணிகரும் உத்தியோ கஸ்தர்களும் அவருக்குப் பெரும் பொருள் உதவி செய்தனர். அடிகள் அப்பணத்தைக் கொண்டு சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்டிமுடித்துக் குடியேறினார்; நாளடைவில் பல நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டுப் பொருளீட்டினார்; சிறிய அச்சகம் ஒன்றை ஏற்படுத்தினார். படிப்படியாக நாற்பதாண்டுகளில் நாற்பதாயிரம் ரூபாய் பெறத்தக்க நூல்நிலையத்தை ஏற்படுத்தினார். வடமொழி நூல்கள், தமிழ் நூல்கள், ஆங்கில இலக்கியம், வரலாறு, சமயம் என்னும் மூவகையில் வெளிவந்த ஆங்கில நூல்களும் அவர் நூல்நிலையத்தை அழகு செய்கின்றன.

அடிகள் மறைவு

அடிகள் 1950-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆம் வயதில் நோய் வாய்ப்பட்டார்; ஒரு மாத காலம் நோயால் வருந்தி, செப்டெம்பர் மாதம் 15-ஆம் நாள் மறைந்தார். அடிகளது மறைவு தமிழ் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பெரிய நஷ்டமாகும்.

சிறந்த பண்புகள்

L

அடிகள் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர்; ழைப்பே உருவமானவர்; பல நூல்களைத் தாமே படித்துப் படித்துப் பண்பட்ட புலமையடைந்தவர்; ஊக்கம், உழைப்பு மிக்கவர்; தம் மனத்திற்கு மாறாக எதனையும் செய்யார்; எத்தகைய நன்மை வரினும் தம் கொள்கைக்கு மாறானதைச் செய்யாதவர். இத்தகைய மனவுறுதி உடைய பெருமக்களைக் காண்பது மிக்க அருமை அல்லவா? "பிறந்தது முதல் தமிழைப் பேசும் தமிழர் தம் தாய் மொழி நூல்களை நன்கு கற்கவேண்டும்; அம் மொழியை நன்கு வளர்க்க வேண்டும்; தமிழ் வளர தமிழ் இனம் வளரும் என்பது அடிகளது அறிவுரை.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/331&oldid=1585943" இலிருந்து மீள்விக்கப்பட்டது