உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசமாணிக்கனார் பார்வையில்

மறைமலையடிகள்

299

அழியாப் புகழ்

அடிகள்

தூய தமிழில்

எழுதவேண்டும்

என்னும்

கொள்கையை வற்புறுத்தி அவ்வாறே எழுதி வெற்றி பெற்றவர். ஆதனால் தமிழ்மொழி வரலாற்றில் அவர் சிறந்த இடம் பெற்றுவிட்டார். அவருடைய மொழி பெயர்ப்பு நூல்கள், ய செய்யுள் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், சாதாரணக் கட்டுரை நூல்கள், கடித நூல்கள், சொற்பொழிவு நூல்கள் என்பன நாற்பதாண்டுகளாக நாடெங்கும் பரவி, செந்தமிழ் நடையை நன்மக்களிடையே பரப்பிவருகின்றன. அந்நூல்கள் உள்ளவரை அடிகளது பெயரும் புகழம் அழியாமல் நாட்டில் நிலை பெற்றிருக்கும்.

அடிகளார் புகழ் எங்கும் பரவுக!

இராசமாணிக்கனார் பார்வையில்

மறைமலையடிகள்

- முற்றும்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/332&oldid=1585944" இலிருந்து மீள்விக்கப்பட்டது