உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் 19

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

மறைமலையடிகளாரின் மறைவுக்குப் பின், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அடிகளாரின் நூல் வடிவம் பெறாத சில கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக்கியுள்ளனர். அவற்றள் ஒன்றது இது விளங்குகிறது.

அடிகளாரின் பல்துறைக் கருத்துகளை இந் நூல்வழி அறிய முடிகிறது. உயிரெழுத்துகள் உணர்த்தும் உண்மைகளைத் தமிழின் ஒலியெழுத்துகள் என்னும் இந்நூற் கட்டுரை உணர்த்துகிறது. ஒலியெழுத்துகள் மூவகையின. ஆய்த ஒலி பற்றுக் கோடும் தடையு மின்றித் தானே இயங்குவதாம். பற்றுக்கோடும் தடையும் உற்றுத் தாமே இயங்குவன உயிரெழுத் துகள் பற்றுக்கோடும் தடையும் உற்றுத் தாமே இயங்காதன ஒற்றெழுத்துகள்.

.

மக்கள் உயிர் உணர்வுகளின் மென்மை, வன்மை, ஆறுதல், தேறுதல், வலிவு, பொலிவு ஆகியவற் றோடு அறிவார்ந்த அன்பாம் இன்பநிலை பயப் பிப்பது பாட்டின் பயன்பாடென்பதையும், அக - புறத் தூய்மைகளுக்கு அடிப்படையாயிருத்தலே பாட்டின் குறியென்பதையும் அடிகளார் கூறியுள்ளதை இந்நூற் கட்டுரைகளால் அறிகிறோம்.

- நா. செயப்பிரகாசு மறைமலையடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் (பக். 26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/35&oldid=1585621" இலிருந்து மீள்விக்கப்பட்டது