உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

7

அறிவில்லாத பருப்பொருளினின்றே அறிவுடைய உயிர்ப் பொருள் தோன்றுகின்றதெனப் பல முகத்தானாராய்ந்து கூறிய தென்னையெனின்; அவர் செய்த ஆராய்ச்சி உண்மை யுடையதன்று. ஏனென்றால், அவர் செய்த அவ்வாராய்ச்சி யினைத் திரும்பவும் நுணுகி யாராய்ந்த ‘டிண்டல்' (Tyndall) என்னும் பேராசிரியர், தாமாராய்ந்து கண்ட முடிபாக, உயிரில்லாப் ஈருளிலிருந்து உயிருடைய பொருள் தோன்றாதென்றும், உயிருள்ள ள பொருட் சேர்க்கையி லிருந்தே பிறிதோருயிர் தோன்றுகின்ற தென்றும் அறிவுறுத்தி யுறுதிகூறியிருக்கின்றார்.* ஆகவே, அறிவில்லாப் பருப்பொரு ளிலிருந்து அறிவுடைய நுண்பொருள் தோன்றுமென்றல் உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாதென்று உணர்தல் வேண்டும்.

இனி, ஏகான்மவாதங் கூறும் ஒரு சாரார் சடமென்றுஞ் சித்தென்றும் இரண்டில்லை; சடமே சித்து, சித்தே சடம், பிரமத்தினின்றே நெருப்பிற் புகைபோல மாயையாகிய சடப்பொருளுண்டாம் என்று கூறுவர். அவர் கூற்று மேலே உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாமையானும்; நெருப்பினுண்டாகும் புகை நெருப்பை யணைந்த விறகின் காரியமேயல்லாது நெருப்பின் காரியம் அன்றென்பதற்குக் கனிந்த தணலிற் புகையுண்டாகக் காணாமையே சான்றா

காட்டிய

மாகலின் வ்வுவமையின் தன்மையை யுற்றுணராது

ம்

தனைக் கொண்டு தூய அறிவுப் பொருளாகிய பிரமத்தி னின்று அறிவில்லாச் சடப்பொருளாகிய மாயை தோன்று மென்றல் ஒருவாற்றானும் பொருந்தாமையானும் ஏகான்ம வாதிகள் கூறும் பொருள் ஏற்கற்பாலதன்று. எனவே, அறிவில்லாப் பொருள்களும் அறிவுடைய உயிர்ப்பொருள் களும் எக்காலத்தும் வெவ்வேறாம் இயல்புடையவாகவே யிருக்கு மென்று கடைப்பிடித்துணர்தல் வேண்டும்.

இனி, இத்தன்மையவாகிய இரு கூற்றுப் பொருள் களுள், அறிவில்லதாகிய சடப்பொருள் தானே இயங்க மாட்டாதாகலின், அதனை இயக்குதற்கு அறிவுடைய பிறிதொரு பொருளின் சேர்க்கை அதற்கு இன்றியமையாது வேண்டப்படும். அஃதொக்குஞ், சடப்பொருளை இயக்குதற்கு அறிவுடைய உயிர்ப்பொருள்கள் இருத்தலின் அவையே போதும், அவற்றினும் வேறாகக் கடவுளென்று வேறோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/40&oldid=1585626" இலிருந்து மீள்விக்கப்பட்டது