உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

63

கபாடபுரத்திலிருந்து தமிழாராய்ந்த சங்கத்தார்க்குக் குமரியை எல்லையாக வைத்துக் கூறுதல் யாங்ஙனம் பொருந்துமெனக் கடாவெழுப்பித் தென்னாடு கடல் கொள்ளப்பட்ட பிற்காலத்து மற்றது தெற்கெல்லையாக நிகழ்ந்ததாகலின் அவ்வெல்லை கூறிய அப்பாயிரச் செய்யுள் பனம்பாரனர் செய்ததன்றெனவும், இதற்குக் களவியல் பாயிரவுரையில் இப்பாயிரந் தொல்காப்பியனார் செய்த தென்றும் பிறவுரையாசிரியர் அது பனம்பாரனர் இயற்றிய தென்றுந் தம்முள் மாறுகொண்டுரைத்தலே கரியாமெனவுங் கூறினார்கள். கடல் கொள்ளப்பட்ட குமரிநாட்டின்

வடவெல்லை பஃறுளியாறெனவும் தெற்கெல்லை குமரியா றெனவும் இதனிடைக்கிடந்த நாடு எழுநூற்றுக்காவதப் பரப்புளதெனவுந் தொல்லாசிரியர் இனிதெடுத்தோதுதலால் அப்பெரிய தமிழ்நாட்டிற்குக் குமரியாறு தெற்கெல்லை கூறியது பொருத்தமிகவுடைய தேயாம். குமரிநாடு கடல் கொண்ட பிற்காலத்தே செய்யப்பட்ட பாயிரமாயின் வடக்கண் வேங்கடம் ஒன்றுமே எல்லைகூறி மேல் கீழ்த்திக்கு கட்குக் கடலெல்லை கூறியவாறு போலத் தென்றிக்குக்கும் கடலெல்லை கொண்டு வாளாது ஒழிவார். கடல்கொள்ளப் பட்டபின் நூலெழுதிய சிறுகாக்கை பாடினியாரும் இவ்வாறே "வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத், தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும், வரைமருள் புணரியொடு பொருது கிடந்த” எனப் பாயிரமுரைத்தார். அவ்வாறன்றிக் கடல் கொள்ளப் படாமுன் பரந்துகிடந்த செந்தமிழ் நிலம் வரையறுக்கின்றா ராதலின் குமரியாற்றைத் தெற்கெல்லையாக வைத்துக் கூறினார். அதனை இப்போதுள்ள குமரிமுனை யென மருண்டு பாயிரச் செய்யுள் பனம்பாரனர் செய்த தன்றென் றுரைத்த நண்பரவர்களுரை பொருத்தமின்றாம்.

அற்றேல், குமரி நாடு கடல்கொள்ளப்பட்டபின் பலவாயிர ஆண்டு கழித்தெழுந்த நன்னூற்பாயிரச் செய்யுளிற் குணகடல் குமரிகுடகம் வேங்கடம்' என நிலைவெல்லை கூறியதென்னை யெனின்; செந்தமிழ்த் தனிமொழிப்புறஞ் சிறிது மலையாளங் கன்னடம் துளுவம் முதலிய மொழி களாகத் திரிந்து வேறுபடத் தென்றமிழ்த் தனியகஞ் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/96&oldid=1585684" இலிருந்து மீள்விக்கப்பட்டது