உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் 19

மொழிப்பெருமை

குறுகுங்காலத்தே அந்நூலெழுதப் பட்டதாகலின் அதற்கேற்பச் செந்தமிழ் மணங்கமழாநிற்கு நிலவெல்லை வரையறுத்தற் பொருட்டு அங்ஙனங் குறுக்கி நான்கெல்லை கூறினாராகலின் அஃது ஈண்டைக் கேலாதென்றொழிக. தொல்காப்பியஞ் சிறுகாக்கை பாடினியம் எழுதப்பட்ட காலத்தே செந்தமிழ் மேல்கீழ் பாலெல்லாம் ஒருங்கு கவர்ந்து விரிந்ததாகலின், அவர் நூற்பாயிரங்கட்குக் கடலெல்லை கூறினாரென்க. னித் தொல்காப்பியத்தின்கட் காணப்பட்ட அப் பனம்பாரனார் பாயிரச் செய்யுளையே தொல்காப்பியனார் செய்ததெனக் களவியலிற் காணப்பட்டது அச்சியற்றினேரால் நிகழ்ந்த பிழைபாடாகலின் அஃதீண்டைக்குப் பயன்படாமையறிக. அல்ல தூ உம் அது பனம்பாரனார் செய்ததன்றாயின் உரையாசிரியன்மாரெல்லாரும் அதனை ஏன் அவ்வாறு கூறினார்? என்று உய்த்துணரவல்லார்க்கு அப்பாயிரச் செய்யுள் செய்தார் பனம்பாரனாரென்பது தேற்றமாம். இனிப் பஃறுளியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறிய நெட்டிமையார் செய்யுளிற் "பார்ப்பனமாக்கள்' விதக்கப்படுதலால் அவர்காலத்திற் பார்ப்பன வகுப்பிருந்த தென்பது பெற்றாம். நண்பர் சவரிராயரவர்களும், “அந்தணரெனத் தமிழ் நூலுட் கூறப்படுவோர் ஆரியப்பார்ப்பன ரல்லர், அவர் தமிழ்நாட் டறவோரே" என்று கூறுதலால், அவர்கட்கும் இதுவே கருத்தாம் போலும். இங்ஙன மாகலின் ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னுஞ் சூத்திரத்தை டைச்செருகல்' என்றுரைப்பதற்கு ஒருப்படுவார் மற்றிய மற்றியார்? இன்னுந் ? தால்காப்பியம் எழுதப்பட்ட காலத்தே செந்தமிழ்நாட்டின்கண் வழங்கிய செந்தமிழ் மறைகள் நான்காமென்பதும், அந்நான்மறைவல்ல துறவோராலறிந்து வழிபடப்பட்ட கடவுள் சிவபெரு மானேயாமென்பதும், அத்தெய்வச் செந்தமிழ் மொழி விரிந்த பரந்த நிலவெல்லை பனம்பாரனர் கூறியவாறே நான்கா மென்பதும் விளங்க அந்நெட்டிமையாரென்னும் நல்லிசைப் புலவரோ டொருங்கிருந்த காரிகிழார் “நான் மறை முனிவ ரேந்துகை யெதிரே” எனவும், "முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே" எனவும், “வடா அது பனிபடுநெடுவரை வடக்குந்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/97&oldid=1585685" இலிருந்து மீள்விக்கப்பட்டது