உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

65

தனாஅ துருகெழு கழு குமரியின் றெற்குங், றெற்குங், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங், குடாஅது தொன்று முதிர்பௌவத்தின் குடக்கும்” எனவுங் கூறுதலானுங் கண்டுகொள்க. எனவே, நாற்குல வகுப்பு, நாலெல்லை வகுப்பு, நான்மறை வகுப்பு முதலாயினாவெல்லாஞ் செந்தமிழ் நிலத்தே பண்டைக் காலத்துத் தமிழ் மக்களாற் செய்யப் பட்டுப் பின்போந்து கலப்புற்ற ஆரியராற்றழுவி வேறுவேறாக அவர்மொழி யினுஞ் செய்து கொள்ளப்பட்டன வென்றறிக. து நிற்க.

இனி, ஆரியநால்வகைக்குலப் பாகுபாட்டிற்குந் தமிழியற் குலவகுப்புக்குந் தம்முள் வேறுபாடு பெரிதுண்டாம். ஆரியர் பிறப்பு வகையாற் றமக்கு விழுப்பந் தோற்றுவித்தற் பொருட்டு அங்ஙனம் பாகுபாடியற்றினார். தமிழர் ஒழுக்க வகையான் உலகவியற்கைகளுக்கும் அவன் மனைவிக்கும் பிறப்பவன்றான் பிராமணனென்பர். தமிழர் நான்மறைநெறி வழாதொழுக்க நிகழ்த்தி யுலகிற் குறுதி பயப்பவன்றான் பார்ப்பானென்பர். ஆரியர் இவ்வாறே ஏனை இரண்டாம் மூன்றாம் நான்காங் குலத்திற்குங் கூறாநிற்பர். தமிழர் குறும்புகடிந்து போரியற்றி அரண்காவலமைத்துத் தம் கீழ்வாழ்வார்க்கு

ஒருபாற்

கோடாது ஒப்பவிருந்து நடுவியற்றி யுலகுபுரந்தருளும் அரசனும் அவ்வரசற் குறுதுணையாயிருந்து போரியற்றுஞ் சுற்றத்தாரும் மறவர் அல்லது சத்திரியராமெனவும், ஆநிரை காத்த லுழுதுவித்திடுதல் அரும்பொருள் மாறுதன் முதலிய வொழுக்கம் நிகழ்த்தி நாடுவளம்படுப்பார் வேளாளர் அல்லது வைசியராமெனவும், ம்மூவர்க்கும் உறுதுணையா யுடனிருந்து அவர்க்கு வேண்டுவ வறிந்துறுதி சூழ்ந்து தொழும்பியற்றுவோர் ஏனையோர் அல்லது சூத்திர ரெனவுஞ் சொல்லா நிற்பர். இந்நால்வகுப்பாருந் தத்தங் கரும வகையால் வேறுபடுவாராயினும் ஒருமித்திருந்து உறுவ தாராய்தற்கண் ஒருவரேயாமென்னுங் கடப்பாடுடையர்; ஆரிய வகுப்பாரைப்போல் வேறுவே றிருந்து ஒருமை போழ்ந்து பேரிடருறூஉம் நீரரல்லர் இன்னுந் தென்றமிழ் நாட்டுத் திருக்கோயில்களிற் சிவவழிபாடியற்றும் ஆதிசைவ வகுப்பாரே தென்றமிழ் நாட்டுப் பார்ப்பாராவர். இவரின்ன ராதல் பற்றியே ஆரிய சுமார்த்தப் பார்ப்பனர் இவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/98&oldid=1585686" இலிருந்து மீள்விக்கப்பட்டது