உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் 19

வெறுக்கின்றனர். இவரவரை வெறுப்பாராயினும் ஆதி சைவத் தமிழ்ப்பார்ப்பார்க்குரிய மேம்பாடு ஒரு சிறிதுங் குறைவுபாடெய்துகின்றிலது. ஆரிய சுமார்த்தப் பார்ப்பனர் தன்றமிழ் நாட்டிற்குரிய ரன்றாதல் பற்றியும், அவர் சிவவழிபாடியற்று தற்குரிய அறிவுமுதிர்ச்சி இல்லாமை பற்றியுமன்றே அவரெல்லாந் தமிழச் சிவன்கோயில்களிற் பூசனை இயற்றுதற்கு இடம்பெறாராயினதூஉம், அவரைச் சிவாகமங்க ளெல்லாம் அதிக்ஷிதேணவிப்ரேண என்றொதுக்கியதூ உமென்க. ஆதிசைவத் தமிழப் பார்ப்பன மக்களைப் போலவே விழுமிய வொழுக்கமுடைய ஏனை நன்மக்களுஞ் சிவவழிபாடியற்றுதற் குரிமையுடையராகலான், வேளாள வகுப்பிற் சிறந்தோர் சிலர் ஆசிரியத் தலைமை பூண்டு போதருகின்றார். இங்ஙனம் ஒருவகுப்பார்க்குரிய சிறந்த கருமங்களை வேறோர் வகுப்பார் செய்தற்கிடம் பெறுதல் ஆரியருளின்றாம். ஆகவே, செந்தமிழ்த்தனிமுதன் மக்கள் வகுத்து நிறுத்திய குலநெறி ஆரியமக்கள் வகுத்து நிறுத்திய போற் கொடியதூஉந் தன்னலம் பாராட்டு வதூஉம் அன்றாமென்பது கடைப்பிடிக்க

இனி, ஆரியமக்கட்குரிய பண்டைப் பனுவலான இருக்குவதே இறுதிப் புருடசூத்த மந்திரத்திலேயே அந் நால்வகை வருணப்பாகுபாடு காணக்கிடத்தலானும் மேலே நீர் கூறிய வாதங்களெல்லாம் வலியற்றதாய் விடும் போலு மெனின்; அறியாது கடாயினாய், அப் புருடசூத்தமானது மனிதன் ஆயிரந்தலைகளும் ஆயிரம் விழிகளும் ஆயிரங்கால் களும் உடையனாயிருக்கின்றான். இந்நிலவுலக முழுவதூஉந் தன் முழுநிறைவின்கண்ணே அடக்கி அதனைப் பத்தங்குலப் பரப்பானே மேற்கடந்து சென்றான். இருக்கின்றதும்

.

ருப்பதுமாகிய எல்லாமும் அம்மனிதனேயாம். அவனே சாவைக் கடந்து அதற்கு இறைவனாய் அமர்ந்திருக்கின்றான், உணவினாற் பூரிக்கின்றான். அவன் பெருமை இத்தகையது, மனிதன் இதற்கு மேலானவன்; உளவாவனவெல்லாம் அவனிற் காற்கூறாவனவேயாம். அவனில் மற்றை முக்காற் கூறும் விண்ணில் அழிவின்றி யிருப்பதாம். மனிதன் முக்காற் கூற்றுடன் மேலெழுந்து சென்றான். அவனிற் காற்கூறு மறுபடியும் ஈண்டுப் ஈண்டுப் படைக்கப்பட் து. உண்பனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/99&oldid=1585688" இலிருந்து மீள்விக்கப்பட்டது