உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

67

உண்ணாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும் அவன் உள்நிறைந்து யாண்டும் விரிந்தான். விராச அவனிலிருந்து பிறப்பிக்கப்பட்டான், விராசிலிருந்து மனிதன் பிறப்பிக்கப் பட்டான். அங்ஙனம் பிறந்துழி அவன் முன்னும் பின்னுமுள்ள இவ்வுலகத்தின் மேற்சென்று விரிந்தான். தேவர்கள், மனிதனையே பலியாகக் கொண்டு வேள்வி செய்தபோது வசந்தகாலம் நெய்யாகவும் வேனிற்காலம் விறகாகவும் மழைகாலம் தேவருணவாகவும் இருந்தன. முதற்பிறந்த வனான இம்மனிதனை அவர்கள் நாணற்புல்லிற் கிடத்திப் பலியிட்டார்கள். தேவர்களும், சாதியர்களும், முனிவர்களும் அவனை வேட்பித்தனர். அந்தப் பெருவேள்வியிலிருந்து தயிரும் நெய்யுந் தொகுக்கப்பட்டன. அவையே விலங்குகளுந் தீயவிலங்குகளுமாயின. அந்தப் பெருவேள்வியிலிருந்து

ருக்குச் சாமசுலோகங்களும், செய்யுட்களும், பசுவுந் தோன்றின. அதிலிருந்து குதிரைகளும் பற்களை இரண்டு வரிசையிலுமுடைய உயிர்வகைகளுந் தோன்றின. தேவர்கள் மனிதனைப் பிறந்த போது, எத்தனை கூறாக அவனை அறுத்தார்கள்.

அவன்

அ வனுடை

அவன்

வாய் யாது? தோள்கள் யாவை? எவை ய தொடைகளும் அடிகளுமாகச் சொல்லப் படுகின்றன? எனின்; பார்ப்பனர் அவன் வாயாவர் ராஜந்யர் அவன் தோள்களாக்கப் பட்டார், வைசியர் தொடைகளாவர், சூத்திரன் அவன் அடியிற் றோன்றினான். அவன் மனத்திலிருந்து திங்களுண் டாயிற்று, ஞாயிறு அவன் விழியிற் றோன்றிற்று, இந்திரனும் தீயும் அவன் வாயிற் பிறந்தனர், காற்று அவனுயிர்ப்பில் தோன்றினான், அவனுந்தியிலிருந்து காற்றும், அவன் நான்கு திசைகளுமாக இவ்வாறு உலகங்க ளுண்டாயின. வேள்வி செய்யுந் தேவர்கள் மனிதனைப் பலியிடும் பொருட்டுக் கட்டிய காலையில், எழுகொம்புகளும் மூவேழு சுல்லிவிறகும் உண்டு செய்யப் பட்டன. தேவர்கள் வேள்வியால் வேள்வி முடிப்பித்தார். இவைதாம் பழங்காலத்துக் கருமங்கள். இந்த வலிய கருமங்கள் துறக்கவுலகத்தைத் தருகின்றன, ஆண்டு முன்னைச் சாதியர்கள் தேவர்களாயிருக்கின்றார்" என்று கூறுகின்றது. இம் ம் மந்திரவுரையின் உண்மை

தேற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/100&oldid=1585690" இலிருந்து மீள்விக்கப்பட்டது