உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 19

வல்லார்க்கு, இவ்விருக்குவேத மேற்பாகங்க ளெல்லாம் விடியற்காலம், தீ, சோமா முதலான உலகியற் புறப் பொருளுபாசனை நெறிவழாது செல்ல அதன் கீழ்ப் பாகமாய் நின்ற இவ்விறுதிப் புருடசூத்தமந்திர மாத்திரந் தத்துவ நுண்பொருள் நிறைந்தொழுகு முறைமையானே இம்மந்திர வுரை ஆரியர் செந்தமிழ் மக்களோ டொருங்கு கூடிய பிற்காலத்தே எழுதிச் சேர்த்துவைக்கப்பட்ட தென்னும் இயல்பினிது விளங்கா நிற்கும். இவ்வாறே இப்புருடசூத்த மந்திரமானது இருக்குவேதத்தின் மற்றைப் பாகங்களைப் போல் அத்தனை பழமையான தன்றென்றும், வடமொழி யுரை நடைச்சுவை பெரிது முதிர்ந்த பிற்காலத்தே எழுதி மாழித்திறம் விளங்கச் சேர்த்து வைக்கப்பட்ட தொன் றென்றும் அறிஞர் மாக்ஸ்மூலர், கோல்புரூக், வீபர் முதலாயினாருங் கருத்தொருப் பட்டுரையா நின்றார். இன்னும் இதனை விதந்துரைக்கப் புகுதுமாயின் எடுத்த பொருள் பெருகிடுமாதலால் இத்துணையினமைந்தாம்; இவ்வுரைப் பொருளிற் பண்டிதர் சவரிராயர்க்காதல் மற்றையோர்க் காதல் ஐயுறவு தோன்றுமாயின் அதனைப் பிறிதோர்கால் விரித்துரைத்துப் பொருள் நிறுத்துவாம். எனவே, இப்புருட சூத்த மந்திரவுரையின்கண் ஆரிய நால்வகை வருணப் பாகுபாடு காணக்கிடத்தல்பற்றி நாம் எடுத்துக்கொண் மேற்கோள் வலியிழத்தல் ஒருசிறிதுஞ் செல்லாதென்றெழிக.

என்றிதுகாறும் உரைமொழி விரிந்த தருக்கத்தானே

ளிடை

சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்க யிடையே நுழைந்தனவென்னும் எமதுரைபற்றிப் பண்டைத் தமிழ்ப் பனுவலினெல்லாங் கலவையுண்டாயிற்றென்பது எமக்கும் உடன்பாடாமென்னும் நண்பரவர்கள் உட்கோள் வழுக்கலுறுமாமென்பதூஉம், அச்சிந்தாமணிக் காப்பியந் தமிழ் முதுமக்கள் ஆரியக்காப்பிய விலக்கணம்பற்றி அவ்வழக்கு மிகத் தழீ இ நூலியற்றிய காலத்தே எழுதப் பட்டதொன்றாகலின் ஆண்டுக் கலவையுண்டாதற்குப் போதிய காலமுளதா மென்பதூஉம், ஆரிய மக்கள் வழக்குமிக விரவப்பெறாத பண்டைக்காலத்தே தமிழியன் மாட்சி வகுத்துப் பாகுபாடு நனிவிளங்க இயைபுகாட்டி அரும்பெறல் நிதியமாய் ஆசிரியர் தொல்காப்பியனார் ஈட்டி வைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/101&oldid=1585692" இலிருந்து மீள்விக்கப்பட்டது