உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிய

அறிவுரைக்கோவை

முழுமுதனூலின்கட்

69

கலவைகாண்டல்

ஒருவாற்றாலும் பொருந்துமாறில்லை யென்பதூஉம், யாரோ சிலர் பொய்யாகக் கட்டி வழங்கியவோர் ஐதிகம் பற்றித் தால்காப்பியம் முன்னிலையிற் பின்னிலை பெருக்க முற்றதென்னுமுரை திட்பமின்றி நுறுங்குமாமென்பதூஉம் றையானராகப் பொருளுரைக்குப் பாயிரங் கண்ட முசிரியாசிரியர் நீலகண்டனார் கூறுங் களவியல் வரலாறு ரோவிடங்களில் வரலாற்றுரையியல் பிறழக்காண்டலின் அவ்வரலாற்றினை ஒரேதுவாகக் கொண்டு பண்டைக் காலத்தே தொல்காப்பியம் வழக்கமின்றி வீழ்ந்ததெனவும் அதனைக் கடைச்சங்கத்தார் திரும்பவெழுப்பிப் பெருக்கி வழங்கப் ங்கப் படுத்தாரெனவுங் கூறுந் துணிபுரை முன்பின் மாறுகோள் பெரிதுற்றுப் போலியாயழிந்துபடுமென்பதூஉம் தொல்காப்பிய மெழுதப்பட்ட காலத்தே ஆரியர் தென்றமிழ் மக்களோடு சிறிது பழகப்புகுந்தாராகலின் அந்நூலுள் வடமொழிக் குறியீடுகள் சிலவும் வருவதறியாது மற்றவை காணக்கிடத்தல் பற்றியே தொல்காப்பியங் கலவை கொண்டதா மெனு முரை வாய்ப்புடைய தாமாறில்லை யென்பதூஉம், நால்வகைக்குல வகுப்புக் கடல்கொள்ளப்படு முன்னெழுந்த பழந்தமிழ்ப் பாட்டுகளிற் காணக்கிடத்தலானும் வடமொழிப் பண்டைப்பனுவல்களில் அங்ஙனங் காணப்படாமை யானும் அவ்வகுப்புத் தமிழ் நாட்டின்கண் லொழுகலாறுபற்றிச் செய்துகொள்ளப் பட்டதாமென்பதூஉம் இங்ஙனமாகலின் தொல்காப்பிய நூலிற் காணப்படுங் குலவகுப்புச் சூத்திரங்கள் செருகப்பட்டனவாதல் செல்லா தன்பதூஉம் இருக்கு வேதப் புருடசூத்தமந்திர வுரை பிற்காலத்தே செய்யப்பட்ட தொன்றாகலின் ஆண்டதுபற்றிக் குல வகுப்புத் தமிழ்நாட்டி லுண்டாயிற்றென்னுமுரை பழுதா மாறில்லையென்பதூஉம் இனிது விளக்கித் தொல்காப்பிய முழுமுதனூலின்கட் கலவையுண்டென்னும் நம்முடன் பிறந்தார் சவரிராய பிள்ளையவர்கள் கருத்துப் பொருத்த மிலதென்று காட்டிக் களைந்து தொல்காப்பியம் முழு முதனூலா மென்பது நிறுவினாம். இத் தருக்கவுரையிலே பிழைபாடுளதாயின் நண்பர் - சவரிராயாராதல் ஏனைப் புலவர் பெருமக்களாதல் அதனையெடுத்து வலியுறுத்தி

உலகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/102&oldid=1585693" இலிருந்து மீள்விக்கப்பட்டது