உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் - 20

-

நெஞ்சுவிரும்பிய தம் காதலரின் பின்னே உடன் செல்லும் மகளிருடைய, பஞ்சின்மேல் அடி - பஞ்சைப் போன்ற மெல்லிய அடிகள், பைதல் உற்று உழப்ப துன்பம் அடைந்து வருந்தும்படி, உறுத்துக் கிழிக்கும் பரல் கெழு முரம்பின் - குத்திக் கீறும் பருக்கைக் கற்கள் நிரம்பிய மேட்டு நிலத்தைப்போல்;

புனை, முதனிலைத் தொழிற்பெயர்.

நசை, இங்கு வேட்கை; "நந்நசை வாய்ப்ப” என்னும் அகநானூற் (22) றுரையில் இஃதிப் பொருட்டாதல் காண்க.

66

'நெஞ்சமர் காதலர்' என்பது உள்ளம்விரும்பிய காதலரை; ‘முகத்தான் அமர்ந்தினிதுநோக்கி” என்னுந் திருக்குறளிற் (93)

போல.

‘பஞ்சின், முரம்பின்' என்னும் ஐந்தனுருபுகள் ஒப்புப் பொருளன.

பைதல், துன்பம்; “பதிமருண்டு பைதலுழக்கும்” என்பது திருக்குறள் (12-29).

ச்

தலைவன் தன் தலைவியைப் பிரியுங்கால், அவன் அவட்குக் கோதைசூட்டி, இழைதிருத்தி, முலைதழீஇச் செல்லும் இவ்வியல்புகளெல்லாம். “வலிமுன்பின் வல்லென்ற” வென்னும் பாலைக்கலியின் நன்கெடுத்துரைக்கப் படுதல் காண்க.

பரல்கெழு

மியல்பினதாதல்,

முரம்பு

மடவாரடிகளை

வருத்து

“ஒளிச்செஞ் சீறடி யுருக்கரக் கேய்ப்ப

உளித்தலை வெம்பர லூன்றுபு நலிய"

வெனவரும் பெருங்கதை (53:163-4) யடிகளால் நன்குணரப்படும். (14-23) புலி அதன் உடுக்கை தைஇ-புலியின் தோலாகிய உடையினை உடுத்து, வலிகெழு மூஇலை வடிவேல் ஒருவயின் விளங்க - வலிமைபொருந்திய மூன்று இலைகளைப் போன்ற வடிவமைந்த கூர்வேல் ஒருபக்கத்தே தோன்ற, கொன்றை நனை பிணைத்த மன்றல் அம்தொடலை - கொன்றை முகைகளைத் தொடுத்துக்கட்டிய மணம் பொருந்திய அழகியமாலை, பவளமலை உறழும் மார்பில் துவள

-

பவளங் களாலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/127&oldid=1586871" இலிருந்து மீள்விக்கப்பட்டது