உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

101

அவரையே; ஈது அதிகாரத்தாற் பெறப்படும். 'கவலை' யென்றது ஈண்டுச் சமண் சமயத்திற்குவமை. மேல்வருவனவும் அன்ன.

‘பேதுறுத்தல்' அறிவை மயங்கச்செய்தல்.

‘மயக்குநர்’ என்பதில் நகரவொற்றுப் பெயரிடை நிலை.

(4-5) உவல் இடு பதுக்கையின்

டு

-

தழைகள் பெய்து

மூடப்பட்ட கற்குவியல்போல், புன்பொருள் அகத்து இடு கரவினர் இழிந்தகருத்துக்களை நெஞ்சினுள் இ ட்டுவைத்த

-

கள்ள முள்ளவருமான,

உவல்' தழையென்னுப் பொருட்டாதல் புறநானூறிற்

காண்க (262).

‘பதுக்கை’, மறைப்பிடம்; பதுக்கிவைத்தலின் வந்த தொழிலாகு பெயர்; வழிப்பறிகாரர் தம்மாற் கொல்லப் பட்டார்மேற் கற்களைக் குவித்து அக்குவியல்மேல் தழை பெய்து மூடிவைக்கும் உண்மை,

“செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புபட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை”

என்னும் புறநானூற் (3) றினாலும் பெறப்படும்; பதுக்கை, அகத்துக்கு உவமை.

பொருளென்றது, கருத்து; “நிற்பெறு பொருளில்” என்று மேல் (39) வருதலுங்காண்க.

-

(6-13) புனைமாண்கோதை பொருந்தச் சூட்டியும் புனைதல் மாட்சிமைப்பட்ட பூமாலையைக் கூந்தலுக்குப் பொருந்துமாறு சூட்டியும், வினைமாண் விளங்கு இழை வீறுபடத் திருத்தியும் தொழில் நலஞ் சிறந்த ஒளிவிளங்கும் மணிகளிழைத்த அணிகளைத் தனிச்சிறப்புண்டாகத் திருத்தமாய் அணிந்தும், கொழும்கயல் மழைக்கண் பிறழ்தொறும் மனம்திரிந்து கொழுவிய கயல் மீன்களையொத்த குளிர்ந்த கண்கள் புரளுந்தோறும் அறிவு மயங்கி, செழும்துவர்ச்செவ்வாய் முத்தம் கொண்டு - செழுவிய பவளம்போன்ற சிவந்த வாயின் முத்தம் பெற்று, நசைபிறக்கிடாது வேட்கை பிற்படாமல், முலைதழீஇச் செல்லும் நெஞ்சு அமர்காதலர் பின் செலும் மடவார் முலையணைத்துப் பிரிந்து பிறகு முன்னே செல்லும்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/126&oldid=1586868" இலிருந்து மீள்விக்கப்பட்டது