உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

❖ - 20❖ மறைமலையம் – 20

‘புகலும், போக்கும்' தொழிற்பெயர்கள்; இகல், தொழிலாகு பெயர்; நுழையும் வாயில் 'நூழை' யெனப்பட்டது; இப்பொருட்டாதல் பிங்கலந்தை (4) யிற்காண்க.

சைவசமயம் ஏனைச் சமயங்களொடு மாறுபடாமல், அவையனைத்தையுந் தனக்கு உறுப்புக்களாகக்கொண்டு அவற்றொடு பொருந்தியமைதலின், 'இகலறுசைவம்' எனப் பட்டது; இவ்வரிய உண்மை,

66

ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்கள்

ஒன்றோடொன் றொவ்வாம லுளபலவு மிவற்றுள் யாதுசம யம்பொருணூல் யாதிங் கென்னி

னிதுவாகு மதுவல்ல தெனும்பிணக்க தின்றி நீதியினா னிவையெல்லா மோரிடத்தே காண நின்றதியா தொருசமய மதுசமயம் பொருணூ லாதலினா லிவையெல்லா மருமறையா கமத்தே

யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்”

எனச் சிவஞானசித்தியா (8,13) ரென்னுஞ் சைவசமய நூலில் தெளிவாய் எடுத்தோதப்படுதல் காண்க. ஈதுணரமாட்டாப் பிறசமயத்தார் சைவசமயந் தத்தஞ் சமயங்கட்குமாறாவதென்று பிழைபடக்கருதி, அதனை ஏலாதொழிவராகலின், அவர் கருதுமாறுபோற் சைவசமயம் அத்தன்மைய தன்றென்று இங்குத் தெளிவாய் உணர்த்தியவாறு.

‘திற’ மென்னுஞ் சொல் ஈண்டுச் சைவசமயத்தின் பொருட் கூறுபாடு குறித்து நின்றது; திறம் - கூறுபாடு; “நிற்றிறஞ்சிறக்க” என்றார் புறத்தினும் (6).

'செலா நெஞ்சின' ரென்றது, நுண்பொருள் செல்லுந் தகுதியற்ற பருப்பொருணினைவினை யுடையா ரென்றற்கு.

(3-4) நெறிப்படு மக்கட்கு - வழிச்செல்லும் மக்கட்கு, அறிவு பேதுறுக்கும் - அவரறிவை மயங்கச் செய்கின்ற, கவலையின் - கவர்த்த வழியைப்போல், பிறரை மயக்குநர் - பிறரை மயங்கச் செய்கின்றவரும்;

'நெறிப்படுமக்கள்' என்னுங் குறிப்புச் சைவநெறியிலொழுகா நிற்குஞ் சைவ நன் மக்களைக் குறித்தது; பிறரை என்றதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/125&oldid=1586864" இலிருந்து மீள்விக்கப்பட்டது