உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

பொழில்” என்றும்,

99

"வண்டுந் தும்பியும் வரிக்கடைப் பிரசமுங் கொண்டுபுணர் நரம்பென்று முரன்று, ஐந்து வாயிலானுங் கொள்ளப்படுந் துப்புரவினைத் தன்னகத்துடைத்தாய்ப் பல்வகைப்பட்ட மரங்களானும் பொலிவுடைத்தாய்ப், புறத்தார் அகத்தாரைக் காண்பதரிதாய் அகத்தார்புறத்தாரைக் காண்பதெளிதாய் விழைவு விடுத்த விழுமியோரையும் விழைவு தோற்றுவிக்கும் பண்பிற்று” (இறையனாரகப் பொருள், 2, 18). என்றும் மிக அழகாக உரைத்து விளக்குகின்றமை இங்குப் பெரிதும் நினைவுகூர்ந்து மகிழற்பாலதாகும்.

ஏய், உவமவுருபு; “கஞ்சுகமேய்க்குங் கனங்குழையே” (திருக்கோவையார், 15) என்பதிற்போல.

‘போது’காலவாகுபெயராய் மலரை யுணர்த்திற்று.

‘புகுந்தன' னென்றது, இனிப்புகுவானை; இங்ஙனங் கூறினாள், புகுதலின் விரைவு உணர்த்தித் தலைமகளைத் தேற்றுதற்பொருட்டு; விரைவின்குறிப்புத் தோன்று இறந்த காலத்தின் வைத்து இவ்வாறு கிளத்தலெல்லாம் “வாராக்காலத்து (தொல்காப்பியம், வினையியல், 46) மென்பதனான் முடிக்கப்படும். ஏகாரங்கள் மூன்றனுள் முன்னது விளியெனவும் ஏனைய அசைகளெனவுங் கொள்க

7. இனநலனுரைத்தல்

அடிகள், தமக்குச் சமயநூலுண்மைகள் அறிவுறுத்த சமயாசிரியரையே 'இனநலன்' எனக்கொண்டு, அவரது சார்பால் தமக்குத் திருவருளுணெறிசாரும் வாயில் வாய்த்தமை இதன்கண் உரைத் தருளுகின்றார்.

-

(1-2) புகல் அரு நூழையில் புகுதல் அருமையான சிறிய நுழைவாயிலில், போக்கு அரும் பொருள்போல் - நுழைத்தல் அருமை யான பெரிய பொருளைப்போல், இகல் அறு சைவத் திறம் செலா நெஞ்சினர் - மாறுபாடற்ற சைவக்கோட்பாடு கள் ஏறாத நெஞ்சினையுடையவரும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/124&oldid=1586863" இலிருந்து மீள்விக்கப்பட்டது