உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 20

இ-ள்) மாதே என் அருமைத் தலைமகளே, பெரிதும் வருந்துவது என்னை - நீ மிகவுந் துன்புறுவது என், மனம் திரிதல் ஏது அன்னை அறியின் கொடுமையன்றோ - நினது நெஞ்சந் திரிதற்கான ஏதுவைத்தாய் அறியுமானால் தீங்கு நேருமன்றோ, ஈர்ம் பொதும்பில் - குளிர்ந்த பொழிலில், சூது ஏய் துணைமுலை ஆகம் தழுவித் துயர்மிகுத்த - சூதுக்காய்களை மாறுபடுக்குங் கொங்கைகள் நெருங்கிய நின்மார்பை அணைந்து இத்துன்பத்தை விளைத்த, போது ஏர்பொழில் ஒற்றிச்செவ்வேள் மலர்களின் அழகு விளங்குகின்ற சோலைகள் சூழ்ந்த திருவொற்றிப் பெருமான், வரையப் புகுந்தனன் வரைதற்கு வந்துவிட்டனன்; எனவே நீ வருந்தற்க வென்பது.

-

மனந் திரிதலேது, ஏதுப் பொருளின் வரும் நான்கனுருபும் பயனும் விரித்துக்கொள்க.

ஓகாரம், வினா; ஈது அறிபொருள் வினாவின் கணடங்கும்; இளம் பூரணர் இன்னோரன்னவற்றை ‘அறிவொப்புக்காண்டல் வினா' என்பர். இவ்வியல்புகளெல்லாம் “செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்” என்னுந் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா (13) வுக்குப்போந்த இளம்பூரணர் சேனாவரையருரை களிற் கண்டுகொள்ளப்படும்.

அன்னை, ஈண்டு நற்றாய்; அன்றிச் செவிலித்தாய் எனினும் அவரிருவரெனினும் அமையும்.

மரச்செறிவு

பொதும்பெனப்பட்டது, மிக்க சோலையாதலின்; ஈண்டுக் கூறப்படும் ஆகந்தழுவிய செய்தி குறியிடத்து நிகழ்ச்சியை யுணர்த்துகின்றமையான், அந்நிகழ்ச்சிக் கேற்பப் பொதும்பு கூறப்பட்டது. இப் பொதும்பினியல்பை நல்லிசைப்புலமை வாய்ந்த ஆசிரியர் நக்கீரனார்.

66

சந்தனமுஞ் க சண்பகமுந்தேமாவுந்

தீம்பலவும் ஆசினியும் அசோகுங் கோங்கும் வேங்கையுங் குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பங் கொன்றையொடு பிணியவிழ்ந்த பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்க ளிசைபாடத் தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவுசெய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/123&oldid=1586862" இலிருந்து மீள்விக்கப்பட்டது