உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

-

97

செவ்வேள்மேல் - மதில்களையுடைய திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டருளிய முருகப்பெருமான்மேல், மன்னும் கருத்து உடையயை மாது நிலைபெற்ற உள்ளம் உடைய தலைவி, நிலையும் திரிந்து - பெண்மை நிலையும் மாறி, நிறையும் கடந்து மனத்துள்ள மறைபொருளையுந் தன்வயமின்றியே வெளிவிட்டுச் சொல்லி, தலையும் கவிழ்ந்த தகையள் - பின் அது சொல்லினமை நினைந்து நாணத்தால் தலையுங் குனிந்த தன்மையளாவள்.

செவ்வேண்மேன் மன்னுங் கருத்துடையமாது தலையுங் கவிழ்ந்த தகையளென்க.

நிலைதிரிதலாவது, பெண்மையெனப்படும் நாணம் மட மச்சம் பயிர்ப்புகள் தன்வய மின்றியே மாறுதல்.

நிறை, உள்ளத்துள்ள மறைவினைப் நிறுத்துதலென்பது.

புலப்படாது

களவொழுக்கத்தால்

நாண்மிக்குத்

தலையுங்

தலைவி, மறைவிலொழுகிய

நிலையும் நிறையுங்கடந்து

கவிழ்ந்ததகைய ளாயினாளென்க.

உம்மைகள், எச்சம்.

மலை, உவமை; நிவந்த, உயர்ந்த; “ஓங்கிய வொருகுடை யுருகெழு மதியினிவந்து" என்பர் ஆசிரியர் கோவூர்கிழாரும் (புறநானூறு, 31).

மேல்: ஏழாம்வேற்றுமை இடப்பொருளது.

‘மன்னும்’ நிலைபேறுணர்த்தும் மன்னென்னும் இடைச் சொல்லடியாகப் பிறந்த செய்யு மென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சவினை (5).

6. பிரிவாற்றாத தலைவிக்குத் தோழி கூறல்

மாதே பெரிதும் வருந்துவ தென்னை மனந்திரித

லேதே யறியிற் கொடுமையன் றோவன்னை யீர்ம்பொதும்பிற் சூதேய் துணைமுலை யாகந் தழுவித் துயர்மிகுத்த

போதேர் பொழிலொற்றிச் செவ்வேள் வரையப் புகுந்தனனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/122&oldid=1586861" இலிருந்து மீள்விக்கப்பட்டது