உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் - 20

(50)

(46) என்சொன்னிலை தவறான் (47); குறித்தது கிளவாது செறித்தலுஞ் செறிப்பன் (48); சீரிதிற் போந்து திரிதருநாள்களும் பல; ஒருநாள் நம் (51) மலையகன்சாரல் (52) ஆராமத்தில் நீ வாராயாகத் (53)தனிச்சென்றேன் புகுந்து (54) வாவியின் மேவிநிற்ப, அவனும் ஆண்டு (55) எய்தி என்னொடு நின்றனன் (56); அங்குக் கரையின் ஓங்கி (57) நலமிகப் பயக்கும் (63) நாவல் உகுப்ப (64); ஆமிடைவிழூஉம் அருஞ்சுவைக் கனிகளைப் (66) பெடைக்களிப்ப (67) அலவன் இடுக்கிச் (69) சென்று அருத்தல் நோக்கி (70), என்னையும் நோக்கினன் அன்னதும் நோக்கினன் (71), செய்குவதொன்றுங் காணாது நின்றனன் (73); நின்றவன்நிலை (79) நீ கண்டனையேல் (74), இன்னுயிர்வாழலை (75); யென்று வினைமுடிவு செய்துகொள்க.

5. தோழி முன்னுறவுணர்தல்

என்றது, தோழி, தலைவிக்கு முன்இயற்கைப்புணர்ச்சி யுண்மையைக் குறிப்பாலுணர்தல்; என்னை?

“முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரு முள்வழி யவன்வர வுணர்தலென் றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி"

என்பது களவிய(7)லாதலின், 'முன்னுற வுணர்தல்' என்பதனை ‘முன்’ ‘உறவு' 'உணர்தல்' என மூன்று சொல்லாகப் பிரித்து, 'முன்னே தலைவிக்குந் தலைவற்கும் உண்டான உறவாகிய இயற்கைப் புணர்ச்சியினை யுணர்தல்' என்று பொருளுரைத்துக் கொள்க; “முன்னுற்றதனை யுணர்தலானே இதற்கு முன்னுற வுணர்தலென்று பெயராயிற்று” என்றார் பேராசியரும், (திருக்கோவையார், 62).

"நிலையுந் திரிந்து நிறையுங் கடந்து

தலையுங் கவிழ்ந்த தகையண் - மலைநிவந்த தென்னப் பொலியு மெயிலொற்றிச் செவ்வேண்மேன்

மன்னுங் கருத்துடைய மாது.

-ள்) மலைநிவந்தது என்னப் பொலியும் - மலை உயர்ந்த தன்மைத்து

என்னும்படி விளங்குகின்ற,

என்னும்படி

விளங்குகின்ற, எயில் ஒற்றிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/121&oldid=1586860" இலிருந்து மீள்விக்கப்பட்டது