உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

95

ஒழியிசைப் பொருளது; ஏகாரங்களிரண்டும் அசைகள். 'வாழலை’ எதிர்மறைக் கண் வந்த முன்னிலை முற்று

கொன் அச்சப்பொருட்டாய்ப் பேயினை அடுத்துவந்தது. இஃதிப்பொருட்டாதல் திவாகரத்திற் காண்க.

"பேய்கண் டன்னதுடைத்து" என்னுந் திருக்குறளுக்குப் (565) பரிமேலழகியார் கூறியவுரையையுங் காண்க.

நிறை, தொழிலடியாகப் பிறந்த பெயர்; கருதிய வழியெல்லாம் உள்ளத்தைச் செல்லவிடாமல் நிறுத்துத லென்பது; “கண்டுழியெல்லாம் உள்ளத்தைச்செலீஇ உள்ளத்தின் வழி ஓடுமாகலான் நிறையிலனாம்" எனவருங் களவியலுரை யிலும் (35) இவ்வுண்மை காண்க. ‘துன்று நிலை’, பொருந்திய நிலை; ஆவது நின்றநிலை யென்க.

'நின்றவன் நிலை நீ கண்டனையேல் உயிர்வாழலை மன்னே”யென்க. 65 ஆம் அடிமுதல் இவ் ஈற்றடிகாறும் உரைக்கப்பட்ட இப்பொருள்,

66

“நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்

சேய்கண் டனையன்சென் றாங்கோரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே”

என்று திருச்சிற்றம்பலக் கோவையாருள் (84) 'தோழி விரவிக் கூறல்' என்னும் இத்துறைமேலதாகவே சொல்லும் பொருளும் ஒப்ப உணர்த்தப்பட்டிருத்தல் அறியற்பாலதாகும்.

ச் ச்செய்யுளை, 'அரும்பெறற்பாவாய்! (5) திருவனையாய் (7) முத்தனையாய் (9) சுடர்க்கொடியே (13) உயிரோவியமே (15) மணிவிளக்கே (18) அடியேன் கூறுஞ்சிறுமொழி அறிவுகொளல் வேண்டும் (18-21), குவளை கருவிழிபோல் (25) திருவிளங்க (26), வான்முளை (27) பைத்தென்னப் பரந்திருப்ப (29), நற்பூங்கயங்கள் பொற்பொடும் இமைப்பத் (34) தண்ணடை மருவிய தணியாவிளையுள் (35) ஒற்றிமாநகரின் (36) முருகனைக் கண்டாங்கு (37); கையன் (41), வில்லன், கணையன் (42), குஞ்சியன், இளைஞன், (43) அரியன் பெரியன், திருவளர்செல்வன் (44), வடுவொன்றில்லான்; பெறுவதொன்றுடையன் போல மறுவந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/120&oldid=1586859" இலிருந்து மீள்விக்கப்பட்டது