உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • மறைமலையம் – 20

"மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன

கவைத்தா ளலவ னளற்றளை சிதைய' (பெரும்பாணாற்றுப்படை, 208) என ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் ஓரரிய உவமையுடன் எடுத்துக் கூறி விளக்குதலின்வைத் தறிந்துகொள்ளப்படும். ஞெண்டுவின் வ ளைக்கு 'அளை’ யென்னும் பெயர்

வழக்காதலும், இவ்வடிகளில்‘அளைசிதைய' வென வருமாற்றாற் கண்டுகொள்க.

அருத்தல், அருந்தும்படி செய்தல்; பிறவினை.

ஆ ண்ஞெண்டு தன் பெடைக்குக் காதல் அன்புடன் அருத்தி மகிழ்தல் கண்டு, அம்முகத்தால் முருகனுந் தன் தலைவியின் நினைவெழப்பெற்றுக் காதலன்பில் உருகி ஆற்றானாய்த் தனதெண்ணத்தை முடித்துவைக்குமாறு என்னை நோக்கினன்; மீண்டும் வேட்கைமிகுதியால் அஞ்ஞெண்டையும் நோக்கினன்; அங்ஙனம் நோக்கினமை எனக் கதனைக் குறிப்பித்தமை போலாயிற்று' என்பது. “ஒருகாற் கண்டு தரிக்குந் தன்மைத் தன்றாம் வேட்கை என்னும் இறையனாரகப் பொருளுரை (30-ஆம் நினைவுகூரற்பாலது.

நூற்பாஉரை;)

ங்கு

'உய்குவதறியா' னென்றது, வேட்கைமிகுதி கருதி; அவ்வேட்கையின் மயக்கத்தாற் செய்குவதொன்றுங் காணாது நின்றனன். செய்குவது, குசாரியை; நின்றனனே, ஏ இரக்கப் பொருளது.

(74-79) கொன் உறு பேய்கண்ட அனைய பெற்றியன் ஆகி அஞ்சுதல் பொருந்திய பேயினைப் பார்த்தாற்போல்வதொரு தன்மையனாய், நிறையும் அறிவும் முறைமுறை சாய - உளத்தை ஒருவழி நிறுத்துதலும் அறிவும் ஒன்றன் பினொன்றாய்க் கெட, துன்று நிலை நீங்கா மரம்போல் - பொருந்தும் நிலையினின்றும் நீங்காத மரத்தைப் போல், கன்றிய நோக்கமொடு நின்றவன் நிலை நைந்த நோக்கத்தொடு நின்றவனது நிலையை, நீ னையேல் நீ - பார்த்தனையானால், நெஞ்சம் நெக்குஉருகி உள்ளம் உடைந்து உருகி, இன் உயிர் வாழலை - நினது இ இனிய உயிரொடு வாழ்தல் செய்யாய். அவன் எங்ஙனம் வாழ்தல் செய்வான் 6 என ஒழிந்த ஒழிந்தபொருளை யுணர்த்தலின், மன்,

கண்ட

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/119&oldid=1586858" இலிருந்து மீள்விக்கப்பட்டது