உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

93

‘ஓங்கி கலித்து அரும்பி உவந்து கொடுத்த நாவல் உகுப்ப

வென்க.

(65-73) பால் இடை விழூஉம் நீலமணி கடுப்ப - பாலினுள் விழுகின்ற நீலநிறமான மணியை ஒப்ப, ஆம் இடை விழூஉம் அரும் சுவைக்கனிகள் சு குளத்து நீரினுள் விழுகின்ற மிக்க சுவையினை யுடைய அப்பழங்களை, அளைஇடைத் துஞ்சும் அரும்பெடைக்கு அளிப்ப வளையினுள் துயில்கொண்டிருக்கும் அருமையுடைய ய தன் பெட்டை நண்டுக்குக் கொடுக்கும் பொருட்டு, வேப்பின் கொழுநனை ஏய்க்கும் நெடும் கண் கவைக்கால் அலவன் தாள் இடை இடுக்கி வேம்பின் சழுமையான அரும்பையொத்த நீண்ட கண்களையும் இருபிளவான கால்களையும் உடைய

ஆண்

ண்ஞெண்டு தன் கால்களினிடையில் இடுக்கியபடியாய், அன்புடன் சென்று ஆங்கு அருந்துதல் நோக்கி - அன்பொரு போய் அவ்வளையின்கண் உள்ள தன்பெடை நண்டுக்கு ஊட்டுதலைப் பார்த்து, என்னையும் நோக்கினன் அன்னதும் நோக்கினன்- அதன் காதலை வியந்து என்னையும் பார்த்தான் அதனையும் பார்த்தான், உய்குவது அறியான்போலச் செய்குவது ஒன்றும் காணாது அன்று நின்றனனே - உயிர்பிழைப்பதற்கு வழி யொன்றும் அறியாதவன் போலச் செய்வதொன்றும் அறிய மாட்டாதவனாய் அன்று அலமந்து நின்றான்.

பானீர்வாவியின் நீனிறக்கனிகள்விழுதலிற், 'பாலிடை விழூஉம் நீலமணிகடுப்ப வென்று உவமை கூறினார்.

‘ஆம்’, நீர்; இஃதிப்பொருட்டாதல் “அறுநீர்ப்பைஞ்சுனை ஆம் அறப்புலர்தலின்" என்னும் அகநானூற்றடியிற் (1, 12)

காண்க.

அருமை, ஈண்டு மிகுதிமேற்று. கனிகள் செயப்படு பொருளுருபு விரித்துக்கொள்க.

துஞ்சுமென்று இன்றுயில் குறிக்கப்பட்டது, இங்குக் காட்டப்படுங் காமவின்பத்துக்கேற்ப; 'வேப்பு', இடைவலித்தது. வேம்பின் நனை அலவன் கண்களுக்கு உவமையாதல் பழைய இலக்கியங்களிற் பெருவரவிற்று; "வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்” என்பது ஐங்குறுநூறு (கள்வன் பத்து, 10 ).

ஞெண்டுக்குப் பிளவுபட்ட கால்களுண்மையிற், 'கவைக்காலலவன்' என்றார்; இவ்வியற்கை யுண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/118&oldid=1586857" இலிருந்து மீள்விக்கப்பட்டது