உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

  • மறைமலையம் - 20

சென்றேன், வினைப்பெயர்.

பரிவு - வருத்தம்; பரிபாடல்,8.

மண்வளமும இனிமையும் மிக்க நீர் பால்போல் வெண்ணிற முடையதாய்க் காணப்படுமாகலின், 'பானீர்' எனப்பட்டது. உம்மை, எச்சம்.

(56-64) நொய்தின் திரைபொரு கரையில் புரை இன்று ஓங்கி லேசாக அலைகள் மோதுகின்ற அக்குளக்கரையிற் குற்றமில்லாமல் வளர்ந்து, பசும்குழை கலித்து - பசியதளிர்கள் தழைத்து, நசை நனை அரும்பி விருப்பம் உண்டாக்கும் பூமொட்டுகள் அரும்பெடுத்து, தென்றலொடு புகுந்த வண்டு இசைப்பாணன் இனிமையின் மிழற்றும் தனி இசைக்கு உவந்து தென்றற்காற்றொடு நுழைந்த வண்டென்னும் இசைமிக்க பாட்டுவல்லான் இனிதாக இசைக்கும் ஒப்பற்ற இசைக்கு மகிழ்ந்து, பொதி அவிழ் மலரின் நறவு உணக்கொடுத்து அதற்குப்பரிசிலாக இதழ்க்கட்டு அவிழ்ந்த தன் மலர்களின் தேனை அவை உண்ணும்படி ஈந்து, நினைதொறும் சுவைக்கும் நீல்நிறக் கனிகள் இலைதொறும் குழும நலம் மிகப்பயக்கும் கோழரைநாவல் - நினைக்குந்தோறும் நாவூறுகின்ற நீலநிறப் பழங்கள் இலைகள்தோறுந் தொகுதியாய்ப் பழுத்திருத்தலால் தன்னை அணுகினார்க்கு நன்மையை மிகவும் விளைக்கின்ற வழுவழுப்பான அடியினையுடைய நாவன்மரம், கோட்டின் உகுப்ப இசைகேட்ட மகிழ்ச்சியினாற் கிளைகள் அசைந்து அப்பழங்களைச் சொரிய;

-

நொய்மை, இலேசு; கலித்தல், தழைத்தல்; இதற்கு இப்பொருளுண்மை “தூவற்கலித்த தேம்பாய் புன்னை” என்னும் புறநானூற் (24)றுரையில் காண்க.

‘வண்டிசைப் பாணன்’ இடையே பண்பொட்டு விரித்துக் கொள்க. நீல், கடைகுறைந்தது; “நீனிறவிசும்பு” (பட்டினப்பாலை, 67) என்பதிற்போல, நாவற்பழங்கள் தொகுதி தொகுதியாய்க் காய்த்துப் பழுத்திருத்தலாற் 'குழும வென்றார். குழுமல் தொகுதிப் பொருட்டாதல் திவாகரத்திற் (8) காண்க.

மரத்தின் அரைகள் கோழரை, பொகுட்டரை, முள்ளரை, பொரியரையென நான்கு வகைப்படும்; நாவல் கோழரையினது.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/117&oldid=1586856" இலிருந்து மீள்விக்கப்பட்டது