உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

91

மறுவந்து, மறுவா பகுதி; சுழன்று, இஃதிப்பொருட்டாதல் "மறுவந்துமயங்கி” என்னும் பெருங்கதையிலும் (33, 127), “மறுவரற்பொழுதில்” என்னும் அகநானூற்றினுங் (22) காண்க. (48) குறித்தது தான் சொல்லுவதற்கு உள்ளத்திற் குறித்ததை, கிளவாது செறித்தலும் செறிப்பன் - வெளிப்படச் சால்லாமல் தன்னுள்ளத்தே அடங்குதலுஞ் செய்வன்.

-

குறித்தது, செயப்பாட்டு வினைப்பொருளின் வந்த வினைப்பெயர் கிளத்தல் -வாய்விட்டுச் சொல்லல்; செறித்தல், உள்ளடக்குதல்; இப்பொருட்டாதல் “செறிவறிந்து சீர்மை பயக்கும்” என்னுந் திருக்குறளிற் (123) காண்க. “செறித்தலுஞ் செறிப்பன்' என்றதிற் பின்னின்றது செய்வன் எனக் “காரியவாசக மாய்” நிற்றல் நச்சினார்க்கினியருரையிற் (தொல்காப்பியம், 112)

காண்க.

-

(49-51) உருமும் உளியும் அரவும் பிரியா - இடியோசையும் கரடிகளும் பாம்புகளும் விட்டுநீங்காத, ஆர்அதர் நீந்திச் சீரிதின் போந்து - கொடிய காட்டுவழியைக் கடந்து நலமாய் வந்து, திரிதரும் நாள்களும் பல நாம் இருக்கும் புனங்களிற்றிரிகின்ற நாள்களும் பலவாகும்; உளியம் - கரடி; கோள்வல் உளியம் என்பது சிலப்பதிகாரம் (13, 5). அதர் - வழி, “ஆனினங் கலித்த அதர்” என்பது புறநானூறு (138); ஆர்கொடுமை மேற்று; அன்றிக் கடத்தற்கரிய வழியெனலுமாம், நீந்தி, கடந்தென்றற்கு; ஆவது கடந்துவருதலின் அருமையைக் குறித்தது, உம்மை முற்று. (51-56) ஒருநாள் ஒருநாளன்று, நம் மலை அகன்சாரல் - நமது அகன்ற மலைப்பக்கத்தில், தலைமையொடு பொலியும் ஆராமத்தின் - முதன்மையுடன் விளங்குஞ் சோலைக்கண், நீ வாராயாக ஒருதனிச் சென்றேன் - நீவரவில்லையாகத் தனியே சென்ற யான், பரிவொடு புகுந்து வருத்தத்தோடு உள்நுழைந்து, பால்நீர்வாவியின் மேவிநிற்ப - பாலைப்போலுந் தெளிநீரை யுடைய குளத்தின்கரையிற்சென்று நிற்க, அவனும் ஆண்டு எய்தி என்னொடு நின்றனன் - அத்தலைமகனும் அவ்விடத்தில் வந்து என்னொடு நின்றான்;

‘ஆராமம்,’

மலைச்சோலை;

பிங்கலந்தையிற் காண்க. 'வாராயாக செயவென் வினையெச்சவீறு

-

இப்பொருட்டாதல் வென்பதன் ஆக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/116&oldid=1586855" இலிருந்து மீள்விக்கப்பட்டது